ஐ.பி.எல் தொடரை டீவியில் எந்தெந்த சேனலில் பார்க்கலாம் ? மொபைலில் எப்படி பார்க்கலாம் – ரசிகர்களுக்கான சிறப்பு பதிவு

ipl
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடர் இங்கு ஏற்பட்டிருந்த கொரோனா தாக்கம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணி இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் படைக்க காத்திருக்கிறது.

Ipl cup

- Advertisement -

அதேவேளையில் மற்ற அணிகளும் தாங்கள் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடத்த நடைபெற்றதால் இந்த ஆண்டாவது இந்தியாவில் நடைபெறுமா என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் இந்தியாவில் நடைபெற இருப்பது மிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் தற்போது முழு பலத்துடன் இந்த தொடரில் விளையாட தயாராகியுள்ளது.

அதேவேளையில் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என மற்ற அணிகளும் ஏலத்தில் சிறந்த வீரர்களை தேர்வு செய்து தங்களது அணிகளை பலப்படுத்தி உள்ளதால் இம்முறை கட்டாயம் கோப்பையை வெல்லும் அணிகளுக்கிடையே பெரிய போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய 6 நகரங்களில் மட்டுமே இம்முறை போட்டி நடைபெற இருப்பதால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்து வெற்றி பெறும் என்பது துவக்கத்தில் கணிக்க முடியாது இறுதிப்போட்டி தகுதிச்சுற்று போட்டிகளில் நெருங்கும்போது தான் எந்த அணி பலமானது என்று தெரியவரும்.

starsport

இந்நிலையில் தற்போது இந்த தொடரை ரசிகர்கள் டிவி மற்றும் மொபைல் வழியாக எந்தெந்த சேனலில் பார்க்கலாம் என்பது குறித்த ரசிகர்களுக்கான சிறப்பு பதிவாக இந்த தொகுப்பினை நாங்கள் வழங்குகிறோம். அப்படி இந்தியாவில் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி மே மாதம் 30ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரானது தினமும் இரவுநேர போட்டி என்றால் 7.30 மணிக்கும், மதியநேர போட்டி என்றால் 3.30 மணிக்கும் துவங்கும்.

Hot-star

இந்த போட்டிகளை இந்திய ரசிகர்கள் டிவி வாயிலாக காண ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கன்னடா, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பங்கலா ஆகிய தொலைக்காட்சியில் சேனலில் பார்க்கலாம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றவாறு அந்தந்த மொழிகளில் போட்டியை பார்த்து ரசித்துக் கொள்ளலாம். அதேவேளையில் மொபைல் போனில் லைவ் ஸ்ட்ரீமிங் மேட்ச் பார்க்க வேண்டுமெனில் டிஸ்னிப்லஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவியின் மூலம் ரசிகர்கள் இந்த போட்டியை நேரடியாக கண்டுகளிக்கலாம்.

Advertisement