ஐ.பி.எல் தொடரில் இந்த பாடலை ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் போடவேண்டும் – நெஸ்வாடியா வேண்டுகோள்

Nesswadia
- Advertisement -

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டும் ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்களின் ஏலம் தற்போது நடைபெற்று வருகின்றன. இம்முறை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் விறுவிறுப்பை அதிகரிக்க ஐபிஎல் நிர்வாகம் புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

Ipl cup

- Advertisement -

இந்நிலையில் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ்வாடியா இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தன்னுடைய புதுமையான வேண்டுகோள் வைத்துள்ளார். அதன்படி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருஅணிகளுக்கு இடையேயான போட்டியின் போது அந்தந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம்.

அதேபோல ஐபிஎல் தொடரிலும் இந்திய தேசிய கீதத்தை இசைக்க அனுமதி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இது குறித்த கடிதம் ஒன்றை இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எழுதிய இவர் இனி ஒவ்வொரு ஐபிஎல் போட்டிக்கு முன்பு இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ipl

ஏற்கனவே சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அதேபோன்று கால்பந்து தொடரிலும், ப்ரோ கபடி போட்டிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வருகிறது. எனவே இதனை கருத்தில் கொள்ளுமாறு அளவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் துவக்க விழா நடைபெறாது என்றும் பவர் பிளேயர் மற்றும் நோபால் அம்பயர் என புதுப்புது நடவடிக்கைகளை எடுக்கும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இவரின் வேண்டுகோளை ஏற்குமா என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

Advertisement