2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் வரவிருக்கும் பவர் பிளேயர் திட்டம் – விவரம் இதோ

CSKShop
- Advertisement -

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெற இருக்கிறது. மேலும் இந்த ஐபிஎல் தொடரில் விறுவிறுப்பும் பரபரப்பும் கூட்டுவதற்காக தற்போது புதிய திட்டம் ஒன்றை ஐபிஎல் நிர்வாகம் செயல்படுத்த உள்ளது.

csk

- Advertisement -

அதன்படி அவர்கள் செயல்படுத்த திட்டம் யாதெனில் பவர் பிளேயர் என்ற முறையை அறிமுகப்படுத்தி போட்டியின் சுவாரஸ்யத்தை கூட்ட இருக்கிறார்கள். இதுகுறித்து பிசிசிஐ கூட்டத்தில் ஐபிஎல் கூட்டத்திலும் ஏற்கனவே விவாதித்து ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தை எப்போது அறிமுகப்படுத்துவது என்று முடிவெடுக்க உள்ளனர்.

அதன்படி பவர் பிளேயர் முறையில் அனைத்து அணிகளும் ஆட்டத்தில் சூழலுக்கேற்ப எந்த ஒரு வீரரையும் எந்த ஒரு கட்டத்திலும் மாற்றி அவருக்கு பதிலாக மற்றொரு புதிய விரை களமிறங்கி விளையாட வைக்கலாம். எனவே இனி 11 பேரை அறிவித்தது மட்டுமின்றி மாற்று வீரர் 4 பேரையும் சேர்த்து 15 பேர் கொண்ட அணி விவரத்தை போட்டிக்கு முன் அறிவிக்க வேண்டும்.

இந்த பவர் பிளேயர் மூலம் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம் அப்போது 9 விக்கெட்டுகள் வீழ்ந்து விட்டது என்றால் மீது ஒரு பவுலர் மட்டுமே பேட்டிங் செய்ய இருக்கிறார் என்றால் உங்கள் அணியில் 11 வீரர்கள் தவிர மீதமுள்ள நான்கு வீரர்களில் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் யாராவது இருந்தால் அந்த பந்து வீச்சாளர்களுக்கு பதிலாக அந்த அதிரடி வீரரை நீங்கள் மாற்றி இறக்கிவிடலாம்.

அதேபோன்று கடைசி ஓவரில் 10 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்று நீங்கள் நினைத்த பந்துவீச்சாளர் வெளியில் அமர்ந்து இருந்தாலும் அவரை கடைசி ஓவரை வீச வைக்கலாம் இதுவே பவர் பிளேயர் முறை பயனாகும். எந்த ஒரு வீரரும் எந்த ஒரு ஒரு வீரருக்கும் மாற்றாக எந்த நேரத்திலும் களமிறங்க வாய்ப்பு வழங்கப்படும் இதனால் போட்டியின் இறுதி நேரத்தில் சுவாரசியம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement