கெயில் பேட்டை எரிந்த விவகாரம். தண்டனை அளித்த நிர்வாகம் – என்ன பனிஷ்மென்ட் தெரியமா ?

Gayle-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 50 ஆவது லீக் போட்டி நேற்று மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றில் செல்வதற்கான வாய்ப்பு கொஞ்சம் அதிகமாகும் என்பதால் இரு அணிகளுமே கடுமையாகப் போராடினர்.

gayle 2

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 185 ரன்கள் குவிக்க பின்னர் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 186 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக சிறப்பாக விளையாடிய அதிரடி வீரரான கிறிஸ் கெயில் சிறப்பாக விளையாடி 63 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்த போட்டியில் அவர் 99 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தபோது ஆர்ச்சர் வீசிய பந்தில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் சதத்தை தவறவிட்ட விரக்தியில் மைதானத்தில் தனது பேட்டை தூக்கி எறிந்தார். தரையில் பட்டு சிறிது தூரம் சென்ற பேட் யார் மீதும் படவில்லை. இதனால் எந்த விளைவும் ஏற்படவில்லை.

பின்னர் உடனடியாக ஆர்ச்சர்க்கு கை கொடுத்து விட்டு கெயில் வெளியேறினார். இருப்பினும் இது போன்று களத்தில் வீரர்கள் கோபத்தில் பேட்டை எறிவது தவறு என்று களத்தில் இருந்த நடுவர்கள் நிர்வாகத்திடம் புகார் வைத்தனர்.

gayle 3

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட ஐபிஎல் நிர்வாகம் இது level-1 விதிமுறை மீறல் என்றும் போட்டிக்கான விதிமுறையை மீறியதன் காரணமாக அவரது இந்த போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் போட்டிகளில் இதேபோன்று செயல்படக்கூடாது என்று அவருக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement