நாட்டுக்காக ஐபிஎல் அணிகள் நஷ்டத்தில் போனால் போகட்டும் – இந்திய வீரர்களை வெளுக்கும் கம்பீர், காரணம் என்ன

Gambhir
Advertisement

2023 புத்தாண்டில் ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக்கோப்பையை வெல்லும் எண்ணத்துடன் இந்திய கிரிக்கெட் அணி செயல்பட உள்ளது. குறிப்பாக கடந்த 2013க்குப்பின் எந்த ஐசிசி கோப்பையும் வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க குறைந்தபட்சம் இம்முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை இந்தியா வென்றாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றிருந்த இந்தியா வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் அசத்தும் அணியாகவே இருக்கிறது.

India Rohit Sharma

எனவே 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் கோப்பையை வெல்வதற்கு கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பை இந்தியா பயன்படுத்துமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் சமீப காலங்களில் திறமை இருந்தும் தவறான அணி தேர்வு மற்றும் நட்சத்திர வீரர்களின் சொதப்பலான செயல்பாடுகள் போன்றவை இந்தியாவுக்கு தோல்விகளை கொடுத்தது. குறிப்பாக ஐபிஎல் தொடரால் நிறைய இளம் வீரர்கள் கிடைப்பதால் அவர்களுக்கு சாதாரண இரு தரப்பு தொடர்களில் ஓய்வளிக்கும் தேர்வுக்குழுவினர் சீனியர் வீரர்களுக்கு பணிச்சுமை என்ற பெயரில் ஓய்வு கொடுக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் தான் காரணம்:
ஆனால் முதலில் நிலையான கேப்டன் தலைமையில் முக்கிய வீரர்கள் ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே தொடர்ந்து விளையாடினால் தான் ஒரு அணியாக ஆரம்பத்திலேயே செட்டிலாகி உலகக் கோப்பை கொண்ட பெரிய தொடரை வெல்ல முடியும். ஆனால் அதை செய்யாத கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் மட்டும் பணத்துக்காக ஓய்வில்லாமல் விளையாடுகிறார்கள். மொத்தத்தில் 9 மாதங்கள் இளம் வீரர்கள் விளையாடும் இந்திய அணியில் உலகக்கோப்பை நடைபெறும் 10வது மாதத்தில் மட்டும் முதன்மையான வீரர்கள் விளையாடுகிறார்கள். இந்த அணுகுமுறையே கடந்த 2 உலக கோப்பையில் தோல்விக்கு முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

ROhit Sharma MI vs KKR

அது போக கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதற்காக ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ மற்றும் இந்திய வீரர்கள் விசுவாசமாக நடந்து கொள்கிறார்கள் என்றும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனவே ஐபிஎல் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டாலும் நமக்கு உலகக்கோப்பை வெல்வதே முக்கியம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “முதலில் இந்திய வீரர்கள் இந்தியாவுக்காக இணைந்து விளையாட வேண்டும். ஆனால் கடந்த 2 உலகக் கோப்பைகளில் முதன்மை வீரர்கள் போதியளவு இணைந்து விளையாடவில்லை என்பதே இந்தியாவின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்த மிகப்பெரிய தவறாகும்”

- Advertisement -

“சமீப காலங்களில் நம்முடைய சிறந்த 11 வீரர்கள் எத்தனை போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார்கள்? என்பதை என்னிடம் சொல்லுங்கள். அது சமீப காலங்களில் நடைபெறவில்லை. மாறாக உலகக்கோப்பை சமயத்தில் மட்டும் நாம் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்கிறோம். ஆனால் நீங்கள் உங்களுடைய சிறந்த 11 பேர் அணியை தேர்வு செய்வதற்கு இது சரியான வழியல்ல. எனவே உலகக்கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் முதலில் இப்போதிலிருந்தே முதன்மை வீரர்கள் தொடர்ந்து வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இணைந்து விளையாட வேண்டும். வேண்டுமானால் அவர்கள் டி20 அல்லது ஐபிஎல் தொடரில் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்”

Gautam Gambhir Rohit Sharma Virat Kohli

“அதே போல் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் வீரர்களுக்கு ஓய்வு தேவைப்பட்டால் அதை டி20 கிரிக்கெட்டில் எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் எடுக்கக்கூடாது. அதே சமயம் உங்களது ஓய்வால் உங்களது ஐபிஎல் அணிகள் பாதிக்கப்படும் என்றால் பாதிக்கட்டும் விடுங்கள். ஏனெனில் இந்திய கிரிக்கெட்டில் இந்திய அணி தான் முதன்மை பங்குதாரர், ஐபிஎல் கிடையாது. ஐபிஎல் என்பது வெறும் துணை பொருளாகும். எனவே இந்தியா உலகக் கோப்பை வென்றால் அதுதான் நம்முடைய மிகப்பெரிய சாதனையாகும்”

இதையும் படிங்க2023 உ.கோ’யை இந்தியா பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளால் ஜெயிக்க முடியாது – நிதர்சனத்தை விளக்கும் சங்ககாரா

“எடுத்துக்காட்டாக உலகக்கோப்பைக்காக ஒரு முக்கிய வீரர் ஐபிஎல் தொடரை தவற விட்டால் அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஏனெனில் ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. ஆனால் உலகக்கோப்பை 4 அல்லது 2 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறுகிறது. எனவே என்னைப் பொறுத்த வரை உலகக் கோப்பை வெல்வது ஐபிஎல் தொடரை விட முக்கியமாகும்” என்று கூறினார்.

Advertisement