ஒலிம்பிக் போட்டிகளையே ஒத்தி வச்சாச்சு. அப்போ ஐ.பி.எல் நிலைமையும் இதுதானா – வெளியான புதுத்தகவல்

IPL-1

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா பாதிப்பின் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டிவிட்டது. மேலும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவத் துவங்கி 600 பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

IPL

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் மக்களே தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டால் மட்டுமே இந்த வைரஸில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் கூறி வருகிறது. எனவே உலகம் முழுவதும் முற்றிலுமாக தற்போது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு மக்கள் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

இதன் காரணமாக உலகெங்கும் நடைபெற இருந்த பல விளையாட்டுப் போட்டிகள், பொது நிகழ்ச்சிகள், அரசாங்க நிகழ்ச்சிகள் என அனைத்தும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. ஜப்பானில் துவங்க இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கூட ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் நடைபெற இருந்த மிகப்பெரிய திருவிழாவான ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Ipl cup

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் பிசிசிஐ மற்றும் மத்திய அரசு ஆகிய இரண்டுக்கும் நடுவே ஏகப்பட்ட மாற்று கருத்துக்கள் நிலவுகின்றன. இதுகுறித்து முன்னதாக பேசிய சுகங்குலி போட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் இந்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த கொரோனாவின் தீவிரம் குறையாத பட்சத்தில் இந்த ஆண்டு ரத்து செய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கருதப்படுகிறது. ஏனெனில் இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட கருத்தில் ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகு சூழ்நிலை எவ்வாறு இருக்கிறதோ அதற்கு ஏற்ற மாதிரி ஆலோசனைகள் வழங்கப்படும்.

Ganguly

மேலும் நிலைமைக்கு ஏற்றார்போல் அரசாங்கம் கொண்டுவரும் எந்த வழிகாட்டுதலையும் பிசிசிஐ ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டிகளே அடுத்த வருடம் தள்ளிப்போன நிலைமையில் ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்கக் கூடாதா அவ்வளவு அவசரமாக நடத்துவதற்கு என்ன அவசியம் வேண்டியிருக்கிறது என்றும் பலரும் கேள்வி எழுப்புவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -