IPL Final : ஐபி.எல் தொடரின் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் எத்தனை நிமிடங்களுக்குள் விற்று தீர்ந்தன – தெரியுமா ?

ஐ.பி.எல் தொடரின் இறுதிபோட்டி வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை அணியும், நாளைய போட்டியில் வெற்றிபெரும் அணியும் மோது

Ipl cup
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் இறுதிபோட்டி வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை அணியும், நாளைய போட்டியில் வெற்றிபெரும் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளது.

ipl

இந்த இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விற்கப்பட்டுள்ளன. டிக்கெட் விற்பனை துவங்கிய 2 ஆவது நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளை விற்று தீர்ந்தன. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

மொத்தம் 39000 பேர் அமரக்கூடிய வசதி கொண்ட ஹைதராபாத் மைதானத்தின் டிக்கெட்டுகள் ரூபாய் 1000 முதல் 22,500 வரை டிக்கெட் விலை நிர்ணையிக்கப்பட்டது. இந்த டிக்கெட்டுகள் எப்படி இவ்வளவு விரைவாக விற்றது? மேலும் 5000 ரூபாய்க்கு மேற்பட்ட விலைகொண்ட டிக்கெட்கள் எப்படி விற்றன என்ற ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

இதனால் இறுதிப்போட்டியை நேரில் பார்க்க நினைத்த ரசிகர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். அந்த 2 நிமிடத்திற்கு பின் இணையத்தில் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன என்ற மெசேஜ் மட்டுமே வந்தது என்று பல ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement