CSK vs MI : ஐ.பி.எல் இறுதிப்போட்டியை ஹாட்ஸ்டாரில் பார்த்தவர்களின் எண்ணிக்கை இவ்வளவா ? – விவரம் இதோ

மும்பை அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி நூலிழையில் தவறிவிட்டது இதனால் ஐ.பி.எல் தொடரை இழந்தது

Dhoni

மும்பை அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி நூலிழையில் தவறிவிட்டது இதனால் ஐ.பி.எல் தொடரை இழந்தது சென்னை அணி. மும்பை அணி 4 ஆவது முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.

Malinga

இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 149 ரன்கள் எடுத்தது. இதனால் அடுத்து விளையாடி சென்னை அணிக்கு 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கினை நோக்கி சிறப்பாக ஆடி வந்த சென்னை அணி ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் என்றே நினைத்தார்கள்.

வாட்சன் 80 ரன்கள் அடுத்து வெளியேறியபோது பதற்றம் தொற்றிக்கொண்டது. இறுதியில் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. ஏனென்றால் சாதாரணமான போட்டி போன்று இல்லாமல் இறுதிப்போட்டி இறுதிவரை சுவாரசியமாக இரண்டு அணிகளுமே சமமான வெற்றி வாய்ப்புடன் பரபரப்பாக இறுதி வரை சென்றது.

MI

இந்த போட்டியை ஹாட்ஸ்டார் மூலம் பார்த்தவர்களின் எண்ணிக்கை 16.9 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக பார்வையாளர்கள் ஹாட்ஸ்டார் மூலம் இந்த போட்டியை கண்டு களித்துள்ளனர். கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பேர் ஹாட்ஸ்டார் மூலமாக பார்த்து போட்டியாக சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த இந்த போட்டி என்ற சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.