இவரை அணியில் சேர்க்காமல் இருக்கும் வரை உங்களுக்கு தோல்வி தான் – ஐதராபாத் அணியை வறுத்தெடுத்த ரசிகர்கள்

Williamson
- Advertisement -

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் சேஸ் செய்ய முடியாமல் தோல்வி அடைந்துள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உடன் 10 ரன்கள் அடிக்க முடியாமல், 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 6 ரன்கள் அடிக்க முடியாமல், மீண்டும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. முதல் போட்டியில் ஆவது 188 ரன்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடிக்க வேண்டி இருந்தது. ஆனால் நேற்றைய போட்டியில் வெறும் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோட்டைவிட்டது மிகப் பெரிய ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் ஹைதராபாத் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

siraj

- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 149 ரன்கள் அடித்தது. பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் 16 ஓவர்கள் மிக சரியாக விளையாடியது. டேவிட் வார்னர் மற்றும் மனிஷ் பாண்டே சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். அதன் பின்னர் இருவரும் அவுட்டாகி விட, பேர்ஸ்டோ மீதி ரன்களை அடிப்பார் என்று எதிர்பார்த்தால் அவரும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

அதேபோல விஜய் சங்கர், ஜேசன் ஹோல்டர், சமத் என அடுத்தடுத்து விக்கட்டுகள் சரிங்க ஹைதராபாத் ஆணியால் இறுதியில் எளிய இலக்கை அடைய முடியாமல் தோல்வியுற்றது. இந்நிலையில் முதல் இரண்டு போட்டியிலும் கேன் வில்லியம்சன் இருந்திருந்தால் நிச்சயமாக போட்டியில் இறுதி வரை கொண்டு சென்று இருப்பார். இதற்கு முன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக பலமுறை இதை வில்லியம்சன் செய்துள்ளார்.

Williamson 2

எனவே அவரை இனி வரும் போட்டிகளில் நிச்சயமாக வார்னர் களமிரக்க வேண்டும் என ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வல்லுனர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அணியில் டேவிட் வார்னர், விருத்திமான் சஹா, மனிஷ் பாண்டே, ஜானி பேர்ஸ்டோ போன்ற டாப் வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தால், அணியை இறுதி வரை எடுத்துச் செல்லக்கூடிய வீரர் வில்லியம்சன் மட்டுமே.

williamson 1

எனவே அவரை இனி வரும் போட்டிகளில் வார்னர் எந்தவித ஈகோவும் காட்டாமல் ஆட வைக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement