யு.ஏ.இ யில் மீண்டும் ஐ.பி.எல் தொடர் . தீடிரென ரெய்னா வைத்து கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் – காரணம் இதுதான்

Raina

இந்தியாவில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களிடையே பரவிய கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள 31 போட்டிகள் எங்கு எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் என்று பிசிசிஐ நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சியுள்ள ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ipl

அதன்படி இந்த தொடரானது செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து அக்டோபர் 10 வரை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது. இந்த செய்தியினால் தற்போது இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் வேளையில் பழைய போட்டிகளை வைத்து யார் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று கணிக்க தொடங்கிவிட்டனர்.

- Advertisement -

மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த தொடர் நடைபெறுவதால் சுரேஷ் ரெய்னாவையும் நெட்டிசன்கள் திடீரென கலாய்த்து வருகின்றனர். மேலும் ரெய்னா குறித்த ட்ரோல் மீம்ஸ்களையும் பறக்கவிட்டு வருகின்றனர். ஏனெனில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நடைபெற்றபோது துபாய் சென்று தங்க வைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா சில நாட்கள் அங்கிருந்தார்.

raina

ஆனால் தீடீரென தான் தங்கிய அறையில் பால்கனி இல்லை என அணி நிர்வாகத்திடம் பிரச்சினையில் ஈடுபட்டு நாடு திரும்பினார். எனவே இம்முறை ரெய்னாவிற்கு பால் கனியுடன் கூடிய ரூமை ஒதுக்குங்கள் என்றவாறு நெட்டிசன்கள் சுரேஷ் ரெய்னாவை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Raina

மேலும் இது குறித்த பல மீம்ஸ்களையும் இணையத்தில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடாத சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு மீண்டும் அணியில் இணைந்து இருப்பது பலத்தை சேர்த்துள்ளது. இதுவரை இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா 123 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement