ஏப்ரல் 14 வரை ஊரடங்கு. அப்போ ஏப்ரல் 15 ஐ.பி.எல் குறித்த தகவல் இதுதான் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Ipl cup
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகின்றன. இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்களின் பெரும் ஆரவாரத்தினால் இந்த ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு பதின்மூன்றாவது சீசனாக மார்ச் 29ம் தேதி (இரு தினங்களுக்கு முன்னர்) துவங்க இருந்தது.

IPL-1

- Advertisement -

ஆனால் இந்த போட்டி தொடர் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டதாக ஏற்கனவே பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் தற்போது உலகெங்கிலும் பரவி வரும் இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஏப்ரல் 15ஆம் தேதி எப்படி ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி தொடங்கப்படும் என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

CskvsMi

ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐயின் தலைவர் கங்குலி கூறுகையில் : இப்போதைக்கு இந்த தொடரை தள்ளி வைக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் ஐபிஎல் போட்டிகளை எப்போது நடத்துவது குறித்து கலந்து ஆலோசிக்கவில்லை. மார்ச் 14ம் தேதி அன்று நடந்த கூட்டத்தில் ஏப்ரல் 15 வரை ஒத்தி வைக்கலாம் என்று முடிவெடுத்தோம். அதன் பிறகு இன்னும் சூழல் மாறவில்லை இப்போது வரை எங்களால் எதுவும் உறுதியாக கூற முடியாது.

- Advertisement -

மேலும் நாட்டிலுள்ள சூழலை கணித்து நாங்கள் செயல்பட உள்ளோம். மேலும் சூழ்நிலையை தீவிரத்தை நன்கு கண்காணித்து வருகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில் : ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைந்த வெளிநாட்டு வீரர்களில் விசா நடைமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டின் குடிமக்கள் ஆறு மாதங்களுக்கு வெளிநாடுகளுக்கு பயணம் செய்யக் கூடாது என்று தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பது சந்தேகம் அதேபோன்று இந்த தொடரில் 62 வெளிநாட்டு வீரர்கள் விளையாட இருப்பதால் அவர்களை விடுத்து இந்த தொடரை நடத்த முடியாது என்றும் கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த வருடம் ஐபிஎல் ரத்தாகவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே ரசிகர்களுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் திருவிழா நிச்சயம் இருக்காது என்றே கூறலாம்.

Advertisement