ஆப்கானிஸ்தானில் ஐ.பி.எல் போட்டிகள் TV-ல வரக்கூடாதாம் – தாலிபான்கள் விதித்த தடை

Thaliban-2
- Advertisement -

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபன்கள் கைப்பற்றியதிலிருந்து அந்நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் சற்று பயங்கரமாகவே இருந்து வருகிறது. அந்நாட்டில் இருந்து வெளியேற மக்கள் பலரும் முயன்று வருகிறார்கள் அதனை நாம் தினசரி பார்த்து வருகிறோம். மேலும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கான உரிமைகளை படிப்படியாக பறித்து வருகின்றனர். பெண்கள் கிரிக்கெட் விளையாடக் கூடாது, எந்த ஒரு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என்று தடைவிதித்துள்ளனர்.

thaliban 1

- Advertisement -

அதுமட்டுமின்றி பெண்கள் பள்ளிக்கு கூட செல்லக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை அவர்கள் விதித்துள்ளனர். அதுமட்டுமின்றி மக்களின் வாழ்வியல் விவகாரங்களிலும் அவர்களது விதிமுறைகள் பெரும் கெடுபிடிகளை கொண்டதாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளை ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும் தாலிபான்கள் தடைவிதித்துள்ளனர். ஏனெனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ரசிகர்கள் நேரில் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

thaliban

அதனால் இந்த போட்டிகளை காண வரும் ரசிகர்களில் பெண்களும் நேரில் வந்து போட்டியை கண்டுகளிக்கின்றனர். அதுமட்டுமின்றி தங்களுக்கு விருப்பமான அணி சிறப்பாக விளையாடும்போது விசில் அடித்து நடனமும் ஆடுகிறார்கள். இதன் காரணமாக அதாவது பெண்கள் போட்டிகளை பார்ப்பதாலும், நடனமாடுவதாலும் ஐபிஎல் போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப கூடாது என தாலிபான்கள் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement