இனி ஐ.பி.எல் தொடரில் போட்டிகள் மட்டுமல்ல. இதுவும் தமிழில் ஒளிபரப்பாகுமாம் – ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி

Ipl cup
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 2020ஆம் ஆண்டு பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் இந்த மாதம் 19ம் தேதி துவங்க உள்ளது. இந்த ஏலத்தில் சுமார் 971 வீரர்கள் ஏலம் விட பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

KKRvCSK_

- Advertisement -

இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொள்கின்றனர். அதன்படி டிசம்பர் 19ஆம் தேதி காலையில் 10 மணிக்கு நடைபெற இருந்தது. ஆனால் தற்போது இந்த ஐபிஎல் ஏலத்தின் நேரம் 10 மணிக்கு பதிலாக தற்போது மதியம் 2.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வழக்கமாக இந்த ஐபிஎல் ஏலம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வர்ணனை செய்யப்படும். ஆனால் தற்போது தென் இந்தியாவில் அதிக அளவு ஐபிஎல் போட்டிகள் பிரசித்தம் பெற்று இருப்பதாலும், ரசிகர்களின் வரவேற்பை பெற்று இருப்பதாலும் தமிழ், தெலுங்கு, வங்காளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நேரடியாக நேரலை வர்ணனை செய்யப்பட உள்ளது.

Rahul 1

இதனால் ஐபிஎல் போட்டிகள் மட்டுமின்றி ஏலமும் தமிழில் இம்முறை நேரடியாக ஒளிபரப்பாகும். ஏற்கனவே ஐபிஎல் போட்டிகள் தமிழில் வர்ணனை செய்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது இந்நிலையில் தமிழில் ஏலம் வர்ணனை செய்யப்படவுள்ளதால் ரசிகர்கள் அதனை நேரலையில் காண ஆவலுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement