ஐபிஎல் 2025 : இனிமேல் 20.50, 24.75 கோடி கிடைக்காது.. வெளிநாட்டு வீரர்களுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ விதிமுறை

BCCI
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில மாதங்களுக்குள் நடைபெற உள்ளது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளதால் அதற்கான புதிய விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன் படி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் அல்லது ஏலத்தில் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போக ஏலத்தில் பங்கேற்று விலை போன பின் கடைசி நேரத்தில் விலகும் வீரர்கள் அடுத்த 2 ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த வரிசையில் வெளிநாட்டு வீரர்கள் பிரம்மாண்ட தொகைக்கு ஏலம் போவதை தடுக்க பிசிசிஐ புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது.

- Advertisement -

புதிய விதிமுறை:

அதாவது சில வெளிநாட்டு வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போக வேண்டும் என்ற நோக்கத்துடன் மெகா ஏலத்தில் பங்கேற்காமல் மினி ஏலத்தில் பங்கேற்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதற்கு எடுத்துக்காட்டாக கடந்த 2024 ஐபிஎல் மினி ஏலத்தில் பட் கமின்ஸ் 20.50, மிட்சேல் ஸ்டார்க் 24.75 கோடிகளுக்கும் வாங்கப்பட்டனர். ஆனால் 17 வருட ஐபிஎல் வரலாற்றில் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இந்தியாவின் ஜாம்பவான்கள் கூட 20 கோடி சம்பளத்தை வாங்கியதில்லை.

அதனால் வெளிநாட்டு வீரர்களின் இந்த வேலைக்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று தினேஷ் கார்த்திக், அஸ்வின் போன்றவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பும் வெளிநாட்டு வீரர்கள் முதலில் 2025 மெகா ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்து பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. தவறுபவர்கள் 2026, 2027 மினி ஏலங்களில் பங்கேற்க தகுதியற்றவர்கள் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

வெளிநாட்டு வீரர்களுக்கு செக்:

இது போக மினி ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களின் உச்சகட்ட சம்பளம் மெகா ஏலத்தில் மற்றொரு வீரர் வாங்கிய உச்சகட்ட சம்பளத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக 2025 மெகா ஏலத்தில் விராட் கோலி 18 கோடிக்கு தக்க வைக்கப்படுகிறார் என்றும் ஜெய்ஸ்வால் 16 கோடிக்கு வாங்கப்படுகிறார் என்றும் வைத்துக் கொள்வோம்.

இதையும் படிங்க: 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் வருண் சக்ரவர்த்தி இந்திய அணிக்கு திரும்ப காரணமே இவர்தான் – விவரம் இதோ

அதனால் 2026 மினி ஏலத்தில் எந்த வெளிநாட்டு வீரரையும் 16 கோடிக்கு மேல் வாங்க முடியாது. மற்றொரு எடுத்துக்காட்டாக ஜெய்ஸ்வால் மெகா ஏலத்தில் 20 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டால் மினி ஏலத்தில் ஒரு வெளிநாட்டு வீரர் அதிகபட்சமாக 18 கோடியை மட்டுமே சம்பளமாக பெற முடியும். இதை நிர்வகிக்க 16 அல்லது 18 கோடிக்கு மேல் வாங்கப்படும் வீரர்களின் ஒப்பந்தம் பிசிசிஐக்கு அனுப்பப்பட்டு பின்னர் வீரர்களுக்கு பயனளிக்கப்படும்.

Advertisement