அடுத்த 2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரானது இந்தியாவில் நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – வெளிநாட்டில் நடைபெற வாய்ப்பு

ipl-finals
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரானது ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.

வருடா வருடம் அதன் தரத்தினை உயர்த்தி கொண்டே வரும் ஐ.பி.எல் தொடரானது அடுத்த ஆண்டு 2024-ல் இந்தியாவில் நடைபெறாமல் வெளிநாட்டில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் அடுத்த ஆண்டு இந்தியாவில் லோக் சபா தேர்தல்கள் நடைபெற உள்ளதால் போட்டிகளை முன்கூட்டியே நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தற்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி போட்டியை முன்கூட்டியே நடத்தலாமா? அல்லது முற்றிலுமாக இந்தியாவிலிருந்து வெளியே அதாவது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரை நடத்தலாமா? என்கிற விவாதம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பான முடிவு டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் கடந்த 2014-ஆம் ஆண்டு லோக் சபா தேர்தல் நடைபெற்ற போது ஐபிஎல் தொடரானது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது.

- Advertisement -

அதேபோன்று இம்முறையும் ஐபிஎல் தொடரை வெளிநாட்டிற்கு மாற்றலாம் என்று கூறப்படுகிறது. அப்படி மாற்றப்பட்டால் நிச்சயம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடத்துவார்கள் என்று தெரிகிறது. ஏனெனில் கொரோனா காலத்தில் ஐபிஎல் இந்தியாவில் நடைபெறாத போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் முழுவதுமாக நடத்தப்பட்டது.

இதையும் படிங்க : வீடியோ : மனுஷனாய்யா நீயெல்லாம், பாவமான சஹாலை வெறியுடன் அடித்த ரோஹித் சர்மா – சிரித்த விராட் கோலி

எனவே ஒருவேளை இங்கு தேதி மாற்றங்களோ அல்லது வேறு திட்டம் ஏதும் செயல்படுத்த முடியாத வேளையில் நிச்சயம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement