ஐபிஎல் 2023 மினி ஏலம் : குறைந்த இந்திய வீரர்களின் மவுசு – 2 முதல் 1 கோடி வீரர்களின் பெயர் பட்டியல் இதோ

IPL 2022
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு இந்தியாவிலேயே கோலாகலமாக நடைபெறுகிறது. அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. முன்னதாக இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய அணிகள் உருவாக்கப்பட்டதால் அதற்கு தேவையான வீரர்களை வாங்கும் வகையில் 2018க்குப்பின் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு 2 நாட்கள் மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது.

IPL

- Advertisement -

அதன் காரணமாக இம்முறை மினி அளவில் ஒரே நாளில் நடைபெறும் ஏலத்தில் தேவையான வீரர்களை வாங்குவதற்காக அனைத்து அணிகளுக்கும் எக்ஸ்ட்ராவாக 5 கோடிகளை பயன்படுத்த பிசிசிஐ அனுமதித்துள்ளது. அதனால் அந்த 5 கோடிகளையும் சேர்த்து விடுவித்த வீரர்களால் மீதமுள்ள தொகையுடன் தங்களுக்கு தேவையான எஞ்சிய வீரர்களை வாங்குவதற்கு 10 அணிகளும் தயாராகியுள்ளன. அதற்கு முன்பாக இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியான வீரர்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டிருந்தது.

குறைந்த மவுசு:

அதில் வழக்கம் போல உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் விண்ணப்பித்த நிலையில் அதை ஆராய்ந்த ஐபிஎல் நிர்வாகம் இறுதியாக 991 வீரர்கள் பங்கேற்க தகுதியானவர்கள் என்று அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் ஏலத்தில் 714 வீரர்கள் இந்தியாவிலிருந்தும் 277 வீரர்கள் வெளிநாடுகளில் இருந்தும் பங்கேற்கிறார்கள். அதில் 185 வீரர்கள் ஏற்கனவே சர்வதேச அளவில் விளையாடியவர்கள் 786 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாதவர்கள். 20 பேர் உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

மொத்தம் 14 வெளிநாடுகளிலிருந்து பங்கேற்கும் இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவிலிருந்து 57 வீரர்கள் களமிறங்குகிறார்கள். மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து 14 வங்கதேசத்திலிருந்து 6 இங்கிலாந்தில் இருந்து 31 அயர்லாந்தில் இருந்து 8 நமீபியாவில் இருந்து 5 நியூசிலாந்தில் இருந்து 27 ஸ்காட்லாந்தில் இருந்து 2 தென் ஆப்பிரிக்காவில் இருந்து 52 இலங்கையில் இருந்து 23 வெஸ்ட் இண்டிஸில் இருந்து 33 ஜிம்பாப்பே மற்றும் அமீரகம் ஆகிய நாடுகளிலிருந்து தலா 6 என மொத்தம் 277 வெளிநாட்டு வீரர்கள் களமிறங்குகிறார்கள். இந்த ஏலத்தில் அதிகபட்சமாக 2 கோடி, 1.5 கோடி, 1 கோடி ஆகிய 3 பெரிய பிரிவுகளில் நட்சத்திர வீரர்கள் குறைந்தபட்ச விலையில் போட்டியிடுகிறார்கள்.

- Advertisement -

ஆச்சரியப்படும் வகையில் இந்த ஏலத்தில் இந்திய வீரர்களின் மவுசு குறைந்தது போல் அதிகபட்ச அடிப்படை தொகையான 2 கோடி பிரிவில் எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் இடம் பிடிக்கவில்லை. அந்த பட்டியல் இதோ: டாம் பாண்டன், சாம் கரண், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ஜெமி ஓவெர்ட்டன், கிரைக் ஓவெர்ட்டன், கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ், நேதன்-கோல்டர்-நைல், பில் சால்ட், அடில் ரசித், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், கேன் வில்லியம்சன், ஆடம் மில்னே, ஜேசன் ஹோல்டர், அஞ்சேலோ மேத்தியூஸ், ராசி வேன் டெர் டுஷன், ரிலீ ரோசவ்

rahane

1.5 கோடி அடிப்படைத் தொகையில் களமிறங்கும் வீரர்களின் பட்டியல்: சீன் அபோட், ரிலீ மெரிடித், ஜே ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, சாகிப் அல் ஹசன், ஹரி ப்ரூக், வில் ஜேக்ஸ், டேவிட் மாலன், ஜேசன் ராய், செபான் ருத்தர்போர்ட்

1 கோடி பிரிவில் களமிறங்கும் வீரர்களின் பட்டியல்: மயங்க அகர்வால், கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே, முகமது நபி, முஜிபுர் ரஹ்மான், மோய்சஸ் ஹென்றிக்ஸ், அண்ட்ரூ டை, ஜோ ரூட், லுக் வுட், மைக்கல் ப்ரேஸ்வேல், மார்க் சாப்மேன், மார்ட்டின் கப்டில், கெய்ல் ஜமிசன், மாட் ஹென்றி, டாம் லாதம், டார்ல் மிட்சேல், ஹென்றிச் க்ளாஸென், தப்ரிஸ் சம்சி, டேவிஸ் வீஸ், அகில் ஹொசைன், ஷை ஹோப், ரஹீம் கார்ன்வால், ராஸ்டன் சேஸ், குசால் பெரேரா

Kedar-Jadhav (1)

இவர்கள் போக கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அஜிங்கிய ரகானே, மும்பையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் தங்களது விலையை 50 லட்சமாக குறைத்துக் கொண்டுள்ளார்கள். அவர்களை போல் எஞ்சிய வீரர்களும் 75 லட்சம், 50 லட்சம், 20 லட்சம் ஆகிய எஞ்சிய 3 பிரிவுகளில் இதர வீரர்கள் ஏலத்தில் களமிறங்க உள்ளார்கள். அப்படி 991 வீரர்கள் களமிறங்கினாலும் 10 அணிகளிலும் சேர்த்து அதிகபட்சமாக 85 வீரர்களுக்கான இடம் மட்டுமே காலியாக உள்ளது. அதனால் கடைசி நேரத்தில் இந்த பட்டியலில் சில வீரர்கள் இன்னும் வடிகட்டப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement