IPL 2023 : 2000% அது நடக்கப்போறது உண்மை தான், தோனி பற்றி ரசிகர்கள் விரும்பாத தகவலை வெளியிட்ட கேதார் ஜாதவ்

Jadhav-1
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் விறுவிறுப்பாக துவங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 4 போட்டியில் 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. முன்னாதாக 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்ட போது விளையாடிய கேப்டன்களில் இப்போதும் விளையாடும் ஒரே கேப்டனாக 15 வருடங்களைக் கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தோனி 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

MS Dhoni SIX

- Advertisement -

இருப்பினும் சமீப காலங்களாகவே பழைய பன்னீர்செல்வமாக பேட்டிங் செய்ய தடுமாறி வரும் அவர் இந்த சீசனில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளிலும் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். குறிப்பாக லக்னோவுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் களமிறங்கி அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் 37* (17) ரன்கள் விளாசி கடைசி பந்து வரை வெற்றிக்கு போராடினார்.

2000% வாய்ப்பில்லை:
அதனால் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்ட அவர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவதையே அனைவரும் விரும்புகிறார்கள். குறிப்பாக தற்போதும் ஃபிட்டாக சிறப்பாக செயல்படும் அவர் குறைந்தது இன்னும் 2 – 3 வருடங்கள் விளையாடுவதை பார்க்க விரும்புவதாக ஷேன் வாட்சன், ரோஹித் சர்மா ஆகியோர் வெளிப்படையாக தெரிவித்திருந்தனர். ஆனால் தன்னை தல என்று தலையில் வைத்து கொண்டாடும் தமிழக ரசிகர்கள் மீது வைத்திருக்கும் பாசத்தால் தம்முடைய கேரியரின் கடைசி போட்டி சென்னை மண்ணில் தான் நடைபெறும் என்று ஏற்கனவே தோனி அறிவித்திருந்தார்.

அதற்கேற்றார் போல் 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து தற்போது சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் இந்த வருடத்துடன் அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போதாக்குறைக்கு பொதுவாகவே மின்னல் வேகத்தில் டபுள் ரன்களை எடுக்கும் திறமை கொண்ட அவர் இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார். அதன் காரணமாக இன்னும் ஓரிரு மாதங்களில் 42 வயதை தொடும் தோனி இந்த சீசனுடன் தமிழக ரசிகர்கள் முன்னிலையில் விடை பெறுவதற்கே அதிகமான வாய்ப்புகள் காணப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் என்ன தான் ஃபிட்டாக சிறப்பாக விளையாடினாலும் விரைவில் 42 வயதை தொடும் தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவது இதுவே கடைசி சீசன் என்று கேதார் ஜாதவ் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்காகவும் சென்னை அணியிலும் தோனியுடன் இணைந்து விளையாடிய கேதார் ஜாதவ் அவருடைய சிறந்த நண்பராகவே பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட நிலையில் 2000% இதுவே தோனியின் கடைசி சீசன் என்று உறுதியாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Jadhav

“ஐபிஎல் தொடரில் ஒரு வீரராக எம்எஸ் தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என்பதை நான் உங்களுக்கு 2000 சதவீதம் உறுதியாக சொல்கிறேன். இதை நான் உங்களுக்கு எக்ஸ்க்ளூசிவாக சொல்கிறேன். ஏனெனில் வரும் ஜூலை மாதம் தோனி 42 வயதை தொடுகிறார். தற்போது என்ன தான் நல்ல ஃபிட்டாக இருந்தாலும் தோனியும் ஒரு மனிதன் ஆவார். எனவே இதுவே அவருடைய கடைசி சீசனாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதனால் ரசிகர்கள் அவர் விளையாடும் எந்த போட்டியையும் தவற விடாமல் அனைத்து பந்தையும் பார்க்க வேண்டும். சொல்லப்போனால் அதனாலேயே ஜியோ சினிமா சேனலில் தோனி பேட்டிங் செய்த போது முந்தைய சாதனையை ரசிகர்கள் உடைத்தனர்”

இதையும் படிங்க:KKR vs SRH : எல்லா மேட்ச்சையும் அவர் ஜெயிச்சி குடுப்பாருன்னு நீங்க நெனைக்குறது தப்பு. தோல்விக்கு பிறகு – நிதீஷ் ராணா பேட்டி

“அவருக்கு பின் ருதுராஜ் அடுத்த கேப்டனாக இருப்பார் என்று நினைக்கிறேன். ஸ்டோக்ஸ், ஜடேஜா ஆகியோருக்கும் வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக ஸ்டோக்ஸ் அனைத்து போட்டிகளிலும் விளையாட தவறுவது ஒரு பிரச்சினையாகும். எனவே தோனிக்கு பின் ருதுராஜ் சென்னையின் கேப்டனாக இருப்பதற்கு சிறந்த தேர்வாக இருக்கிறார்” என்று கேதர் ஜாதவ் கூறியுள்ளது சென்னை ரசிகர்கள் விரும்பாத செய்தியாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement