ஐபிஎல் 2023 : அம்பியாக தடுமாறும் அவரை இந்த சீசனில் அந்நியனாக பாக்க போறீங்க – இந்திய வீரருக்கு பாண்டிங் பயிற்சி

Ponting
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த சீசனில் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கும் 10 அணிகளைப் போலவே அதில் விளையாடும் வீரர்களும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் முயற்சியுடன் களமிறங்க உள்ளனர். குறிப்பாக போட்டி மிகுந்த இந்திய அணியில் மீண்டும் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்ற கனவுடன் ருதுராஜ் கைக்வாட், சஞ்சு சாம்சன் போன்ற நிறைய இளம் கிரிக்கெட் வீரர்கள் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவதற்காக காத்திருக்கிறார்கள். அந்த இளம் வீரர்களுக்கு மத்தியில் டெல்லியை சேர்ந்த அதிரடி வீரர் பிரிதிவி ஷா ஒருவராக திகழ்கிறார்.

shaw 1

- Advertisement -

கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பையை கேப்டனாக இந்தியாவுக்கு வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சதமடித்து சாதனை படைத்தார். மேலும் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி வேகமாக ரன்களை குவிக்கும் தொடக்க வீரராக தன்னை அடையாளப்படுத்திய அவரை வீரந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா ஆகியோர் கலந்த கலவை என அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளிப்படையாக பாராட்டியிருந்தார்.

அந்நியனாக அசத்துவார்:
ஆனால் நாளடைவில் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு தொடர்ந்து சிறப்பாக செயல்படத் தவறிய அவர் கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விடப்பட்டு கடைசியாக கடந்த 2022 ஜூலை மாதம் இந்தியாவுக்காக விளையாடியிருந்தார். அதை தொடர்ந்து தனது உடல் எடையை குறைத்து சயீத் முஷ்டக் அலி டி20 கோப்பையில் சதமடித்தும் தேர்வுக்குழுவால் கண்டுகொள்ளப்படாத அவர் சமீபத்திய ரஞ்சிக்கோப்பையில் முச்சதம் விளாசியதால் ஒரு வழியாக கடந்த பிப்ரவரியில் நடந்த நியூசிலாந்து டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டார்.

shaw

ஆனாலும் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறாத அவர் தற்போது ஃபிட்டாக இருப்பது எக்ஸ்ட்ராவாக உழைத்து வருவதால் தனது ஐபிஎல் கேரியரின் உச்சகட்ட செயல்பாடுகளை இந்த சீசனில் அந்நியனை போல் வெளிப்படுத்துவார் என்று ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக தமது பயிற்சியில் இந்த சீசனில் அவர் அசத்துவார் என்று உறுதியான நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தன்னுடைய அணுகுமுறை மற்றும் எவ்வாறு உழைக்கிறீர்கள்? எப்படி அனைத்தும் செல்கிறது என்பதை பற்றி அவருடன் நேற்று பேசினேன். அதிலிருந்து உண்மையை சொல்ல வேண்டுமெனில் அவருடைய மிகப்பெரிய ஐபிஎல் சீசன் இந்த வருடம் அரங்கேறப் போகிறது என்று நான் உணர்கிறேன். அவருடைய கண்ணில் இந்த வருடம் சற்று வித்தியாசமான தோற்றம் தெரிகிறது. அதாவது இதற்கு முன்பை விட தற்போது அவரிடம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற பசி அதிகமாக காணப்படுகிறது.இதற்கு முன் டெல்லி அணிக்காக அவர் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்”

Ponting

“ஆனால் இயற்கையாக பெற்றுள்ள திறமைக்கேற்ற உண்மையான பிரிதிவி ஷா’வை இந்த சீசனில் தான் நாம் பார்க்க போகிறோம் என்று நினைக்கிறேன். பொதுவாக எனது தலைமையில் விளையாடும் வீரர்களிடம் சோம்பலாக இருக்காதீர்கள் என்று கூறுவேன். மேலும் தங்களிடம் இருக்கும் திறமையை பயன்படுத்தாத வீரர்களை எனக்கு பிடிக்காது. குறிப்பாக கடினமாக உழைக்காத வீரர்களிடம் இருந்து பெரிய அளவில் திறமைகள் வெளிப்படாது”

இதையும் படிங்க:ஐபிஎல் 2023 : அந்த 2 பேரால் சிஎஸ்கே கத்தி மேலே நடக்க போறாங்க – சீனியர் வீரர்களை எச்சரிக்கும் ஹெய்டன்

“அவர் இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது நல்ல இடைவெளியில் இருக்கிறார். குறிப்பாக டெல்லி அணிக்கு வந்தது முதல் அவர் பேட்டிங், ஃபீல்டிங் அல்லது ஃபிட்னஸ் என அனைத்து துறைகளிலும் எக்ஸ்ட்ரா வேலை செய்து வருவது அதற்கான மிகச் சிறந்த அறிகுறியாகும். இந்த விளையாட்டுக்கு நீங்கள் முழு முக்கியத்துவம் கொடுக்காமல் போனால் அது உங்களை வெளியே எடுத்து சென்று விடும் என்று நான் சொல்வேன். அதே சமயம் அந்த விளையாட்டில் நீங்கள் கடினமாக உழைத்தால் அது உங்களுக்கு அனைத்து நேரங்களிலும் நன்மையை பயக்கும்” என்று கூறினார்.

Advertisement