IPL 2023 : மும்பை அணி கழற்றி விட்ட வீரர்களில் அதிக விலைக்கு ஏலம்போக வாய்ப்புள்ள – 4 வீரர்கள் (லிஸ்ட் இதோ)

Daniel Sams
- Advertisement -

உலகப் புகழ் பெற்ற ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு இந்தியாவிலேயே நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெறுகிறது. அதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக ஜொலிக்கும் மும்பை இந்தியன்ஸ் இந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியல் கடைசி இடம் பிடித்ததால் சில அதிரடியான முடிவெடுத்துள்ளது. குறிப்பாக 5 கோப்பைகளை வெல்வதில் முக்கிய பங்காற்றிய கைரன் பொல்லார்டை சுமாரான ஃபார்ம் காரணமாக அதிரடியாக நீக்கியுள்ள அந்த அணி நிர்வாகம் அவரது அனுபவத்தை வெளியே விட விரும்பாமல் பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

MI Mumbai Indians

- Advertisement -

இருப்பினும் ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, சூரியகுமார் யாதவ் போன்ற முக்கிய கிரிக்கெட் வீரர்களை மீண்டும் தக்க வைத்துள்ள மும்பை நிர்வாகம் 13 வீரர்களை அதிரடியாக நீக்கியுள்ளது. இதனால் 20.55 கோடிகளுடன் ஏலத்தில் களமிறங்கும் அந்த அணி கழற்றி விட்டுள்ள சில வீரர்களை மீண்டும் வாங்க நினைத்தாலும் நல்ல திறமையும் அனுபவம் கொண்டுள்ளதால் மீண்டும் வாங்க முடியாமல் போகலாம். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளதால் அவர்களை வாங்குவதற்கு அதே ஏரத்தில் இதர அணிகள் அதிக தொகைகளை செலவழிக்க தயங்காது. அது போன்ற 4 வீரர்களை பற்றி பார்ப்போம்.

4. ஜெயதேவ் உனட்கட்: இந்திய ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவராக கருதப்படும் இவர் இந்த வருடம் 5 போட்டிகளில் 6 விக்கெட்களை மட்டுமே எடுத்து 9.50 என்ற மோசமான எக்கனாமியில் சுமாராகவே பந்து வீசினார். ஆனால் பொதுவாகவே இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கு மவுசு அதிகமாகும். அதிலும் இந்தியராக இருக்கும் இவர் சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் பெரிய தொகைக்கு விளையாடி வருகிறார்.

unadkat

குறிப்பாக 2017 சீசனில் 24 விக்கெட்களை அள்ளிய இவரது மதிப்பு எகிறியதால் இந்த வருடம் மும்பை வாங்கியது. இருப்பினும் அந்த அணியில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் விடுவிக்கப்பட்டுள்ள இவரை இதர அணிகள் பெரிய தொகைக்கு வாங்குவதற்கு தயங்காது. ஏனெனில் 91 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட அவர் 31 வயது மட்டுமே நிரம்பியுள்ளதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு நிறைய அணிகள் போட்டி போடலாம்.

- Advertisement -

3. ரிலீ மெரிடித்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த 26 வயதாகும் இளம் வீரரான இவர் பிக்பேஷ் தொடரில் அசத்தியதால் ஐபிஎல் தொடரிலும் கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு விளையாடிய நிலையில் இம்முறை மும்பைக்கு விளையாடினார். இருப்பினும் 8 போட்டிகளில் 8 விக்கெட்களை 8.43 என்ற எக்கனாமியில் எடுத்து எதிர்பார்ப்புக்கு குறைவாக செயல்பட்ட இவரை மும்பை விடுவித்துள்ளது.

meredith

ஆனால் டி20 கிரிக்கெட்டில் 63 போட்டிகளில் 79 விக்கெட்டுகளை எடுத்துள்ள அனுபவம் கொண்ட இவர் தொடர்ந்து 145 கி.மீ வேகத்தில் துடிப்பாக வீசும் பவுலராக திகழ்கிறார். அதனால் ஒரு மோசமான சீசனை வைத்து குறைத்து மதிப்பிடாமல் இந்த ஏலத்தில் நிறைய அணிகள் இவரை பெரிய கோடிகளுக்கு வாங்க போட்டி போடலாம்.

- Advertisement -

2. முருகன் அஷ்வின்: தமிழகத்தைச் சேர்ந்த ஸ்பின்னரான இவர் இந்த வருடம் 8 போட்டிகளில் 9 விக்கெட்களை 7.86 என்ற ஓரளவு நல்ல எக்கனாமியில் எடுத்தும் மும்பை விடுவித்தது ஆச்சரியமாகும்.

MI vs KKR Murugan Ashwin

ஏனெனில் ஏற்கனவே அந்த அணியில் க்ருனால் பாண்டியா, ராகுல் சஹர் ஆகியோர் இல்லாத நிலையில் இதுவரை 45 ஐபிஎல் போட்டிகளில் 35 விக்கெட்களை 7.87 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்துள்ள அனுபவத்தை கொண்டுள்ள இவருக்கு இந்திய ஸ்பின்னர் என்ற அடிப்படையில் ஏலத்தில் தனி மவுசு இருக்கும். அதன் காரணமாக நல்ல ஸ்பின்னர்கள் இல்லாத அணிகள் இவரை பெரிய தொகைக்கு வாங்க வாய்ப்புள்ளது.

1. டேனியல் சாம்ஸ்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவரும் சமீப காலங்களில் டி20 தொடர்களில் மிரட்டியதால் இம்முறை மும்பை அணிக்காக விளையாடினார். இருப்பினும் பட் கமின்சுக்கு எதிராக ஒரே ஓவரில் 35 ரன்களை கொடுத்து வெற்றியை தாரை வார்த்தது உட்பட ஆரம்பத்தில் மோசமாக செயல்பட்டு கிண்டல்களுக்கு உள்ளான இவர் ஒரு சில போட்டிகளுக்குப் பின் தன்னை தானே மெருகேற்றிக் கொண்டு கடைசியில் மும்பை பதிவு செய்த 4 வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

Daniel Sams

மொத்தம் 11 போட்டிகளில் 13 விக்கெட்களை 8.81 என்ற எக்கனாமியில் எடுத்து ஓரளவு சிறப்பாகவே செயல்பட்ட இவரை மும்பை விடுவித்துள்ளது ஆச்சரியமாகும். ஏனெனில் இடது கை அதிரடி வேகப்பந்து வீச்சாளாரான இவர் லோயர் ஆர்டரில் கணிசமான ரன்களை சேர்க்கும் திறமை பெற்றுள்ளார். குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற ஹண்ட்ரட் தொடரில் 105 ரன்களை 190.90 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து அசத்தினார். எனவே விரைவில் நடைபெறும் ஏலத்தில் இவர் பெரிய கோடிகளுக்கு விலை போவார் என்று உறுதியாக சொல்லலாம்.

Advertisement