ஐபிஎல் 2022 : ஆரம்பம் முதல் ஃபைனல் வரை : ஒவ்வொரு டீமுக்கும் எத்தனை மேட்ச்கள் – முழு லிஸ்ட் இதோ

CSKvsMI
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் மெகா அளவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இந்த தொடரை நடத்துவதற்கான அனைத்து வேலைகளிலும் பிசிசிஐ மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. இந்த வருடம் லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட ஏற்கனவே உள்ள பழைய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கேற்க உள்ளது.

IPL-bcci

- Advertisement -

வழக்கமாக 56 லீக் சுற்றுப் போட்டிகளும் 4 பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் அடங்கிய ஐபிஎல் தொடர் நடைபெறும். ஆனால் இம்முறை 10 அணிகள் விளையாட உள்ளதால் 70 லீக் சுற்று போட்டிகளும் 4 பிளே ஆப் சுற்று போட்டிகள் அடங்கிய 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

ஐபிஎல் தேதிகள், மைதானங்கள்:
இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் இந்த ஐபிஎல் 2022 தொடருக்கான ஆரம்ப தேதி மற்றும் பைனல் நடைபெறும் தேதி போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் அடங்கிய அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இதை ஐபிஎல் நிர்வாகத்தின் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் அறிவித்துள்ளார் என்பதால் இதுவே இறுதியான அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும்.

ipl

அதன்படி ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26ஆம் தேதியன்று துவங்கி 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்வித்த பின் மே 29ஆம் தேதியன்று நிறைவுக்கு வருகிறது. அதேபோல் வழக்கமாக 7 – 8 நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இந்த வருடம் வீரர்களின் நலன் கருதி மும்பை மற்றும் புனே ஆகிய 2 நகரங்களில் உள்ள மைதானங்களில் மட்டுமே நடைபெற உள்ளது.

- Advertisement -

அதாவது மும்பையில் இருக்கும் புகழ் பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 20 லீக் சுற்றுப் போட்டிகள், அதன் அருகில் இருக்கும் டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் 15 லீக் சுற்று போட்டிகள், நவி மும்பையில் இருக்கும் ப்ராபர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 20 லீக் சுற்றுப் போட்டிகள் மற்றும் புனே நகரில் இருக்கும் எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் 15 லீக் சுற்றுப் போட்டிகள் என மொத்தம் 70 லீக் சுற்றுப் போட்டிகள் முழுவதும் மும்பை மற்றும் புனே நகரில் நடைபெற உள்ளன.

IPL

போட்டிகள், பார்மட்:
ஒவ்வொரு ஐபிஎல் அணிகள் 14 லீக் சுற்று போட்டிகளில் விளையாடும் என்பது நமக்கு தெரியும். அந்த வகையில் ஒரு அணி மும்பையில் உள்ள வான்கடே மற்றும் டிஒய் பாட்டில் மைதானத்தில் தலா 4 லீக் போட்டிகளில் விளையாடும். அத்துடன் நவி மும்பையில் உள்ள ப்ராபர்ன் கிரிக்கெட் மைதானத்திலும் புனேவில் உள்ள எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் தலா 3 போட்டிகள் என மொத்தம் 14 போட்டிகளில் விளையாடும்.

- Advertisement -

அதேபோல் ஏற்கனவே 8 அணிகள் இருந்தபோது ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 லீக் போட்டிகளில் மோத வேண்டும் என்ற அடிப்படையில் 14 போட்டிகளில் விளையாடி வந்தன. ஆனால் இந்த முறை 10 அணிகள் உள்ளதால் அந்த வகையில் விளையாடினால் 90 போட்டிகள் விளையாட வேண்டி வரும் என்பதால் இந்த முறை லீக் சுற்றுக்கு புதிய பார்மட் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே இந்த முறை அனைத்து 10 அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட குரூப் ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்படும். அதில் குரூப் பி பிரிவில் இருக்கும் ஒரு அணி அதே பிரிவில் இருக்கும் எஞ்சிய 4 அணிகளுடன் தலா 2 லீக் போட்டிகளில் மோத வேண்டும். அதே சமயம் தனக்கு நேராக எதிர் குரூப் பி பிரிவில் இருக்கும் அணியுடன் 2 லீக் போட்டியில் விளையாட வேண்டும்.

ipl trophy

அத்துடன் குரூப் பி பிரிவில் இருக்கும் எஞ்சிய 4 அணிகளுடன் தலா 1 போட்டியில் மோத வேண்டும். இந்த வகையில் ஒரு அணி 14 சுற்றுப் போட்டிகளில் விளையாடி முடிக்கும். இந்த 10 அணிகளும் 2 பிரிவுகளும் பிடிக்கப்பட்டாலும் கூட புள்ளிப்பட்டியல் என்பது வழக்கம்போல ஒன்றாகவே இருக்கும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் வழக்கம்போல பிளே ஆப் சுற்றில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பிரிவுகள் & யார் யாருடன்:
அந்த வகையில் ஐபிஎல் 2022 தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தற்போது அதிகாரப்பூர்வமாக 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு அணி இதற்கு முன் எத்தனை ஐபிஎல் கோப்பைகளை வாங்கியுள்ளது, எத்தனை பைனல்களில் விளையாடியுள்ளது என்பதன் அடிப்படையில் இது பிரிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்தப் பிரிவுகளைப் பற்றி விரிவாக பார்ப்போம்:

CskvsMi

குரூப் ஏ : மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ.
குரூப் பி : சென்னை, ஹைதெராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத்

இப்போது ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் எத்தனை போட்டிகளில் மோத உள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

cskvsmi

1. மும்பை இந்தியன்ஸ் : கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ மற்றும் சென்னை ஆகிய அணிகளுடன் தலா 2 போட்டிகளில் விளையாடும் மும்பை அணி ஹைதெராபாத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய அணிகளுடன் தலா 1 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

2. சென்னை சூப்பர் கிங்ஸ் : ஹைதெராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் மற்றும் மும்பை ஆகிய அணிகளுடன் தலா 2 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதன்பின் கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் லக்னோ ஆகிய அணிகளுடன் தலா 1 போட்டியில் பங்கேற்க உள்ளது.

kkrvsmi

3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: மும்பை, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதன்பின் சென்னை, பெங்களூரு, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட உள்ளது. அதன்பின்

4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : சென்னை, ஹைதராபாத், பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளுடன் தலா 2 லீக் போட்டிகளில் மோதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதன்பின் மும்பை, கொல்கத்தா, டெல்லி மற்றும் லக்னோ ஆகிய அணிகளுடன் தலா 1 போட்டியில் பங்கேற்க உள்ளது.

mivsrcb

5. ராஜஸ்தான் ராயல்ஸ் : பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி, லக்னோ ஆகிய அணிகளுடன் தலா 2 போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அதன்பின் சென்னை, ஹைதராபாத், பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய அணிகளுடன் தலா 1 போட்டியில் விளையாட உள்ளது.

6. சன் ரைசெர்ஸ் ஹைதெராபாத்: கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோதும் சன்ரைசர்ஸ் அதன்பின் மும்பை, ராஜஸ்தான் டெல்லி, லக்னோ ஆகிய அணிகளுடன் தலா 1 போட்டியில் விளையாட உள்ளது.

CSKvsSRH

7. டெல்லி கேபிட்டல்ஸ் : பஞ்சாப், லக்னோ, ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய அணிகளுக்கு எதிராக தலா 2 போட்டிகளில் விளையாடும் டெல்லி கேப்பிட்டல் அணி அதன்பின் குஜராத், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய அணிகளுடன் தலா 1 போட்டியில் மோத உள்ளது.

8. பஞ்சாப் கிங்ஸ் : டெல்லி, குஜராத், பெங்களூரு, ஹைதராபாத், சென்னை ஆகிய அணிகளுடன் தலா 2 போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் கிங்ஸ் அதன்பின் லக்னோ, ராஜஸ்தான், கொல்கத்தா, மற்றும் மும்பை ஆகிய அணிகளுடன் தலா 1 போட்டியில் பங்கேற்க உள்ளது.

srhvsrcb

9. லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் : டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா மும்பை மற்றும் குஜராத் ஆகிய அணிகளுடன் தலா 2 போட்டிகளில் பங்குபெறும் லக்னோ அதன்பின் பஞ்சாப், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய அணிகளுடன் தலா 1 போட்டியில் விளையாட உள்ளது.

10. குஜராத் டைட்டன்ஸ் : லக்னோ, பஞ்சாப் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய அணிகளுடன் தலா 2 போட்டிகளில் முதல் குஜராத் டைட்டன்ஸ் அதன்பின் டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய அணிகளுடன் தலா 1 போட்டியில் பங்கேற்க உள்ளது.

Dc vs Srh

இந்த ஐபிஎல் தொடரை பார்ப்பதற்கு 40 சதவீத ரசிகர்கள் மட்டும் மைதானத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையும் பிளே ஆப் சுற்றுப்போட்டிகள் எங்கே நடைபெற உள்ளது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement