ஐபிஎல் 2022, 2வது போட்டி : முதல் வெற்றி யாருக்கு? மும்பை – டெல்லி ஆகிய அணிகளின் உத்தேச 11 பேர் அணி இதோ

DC vs MI
- Advertisement -

ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்த ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் உலகப் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் விளையாடுவதால் 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடர் வரும் மே 29-ஆம் தேதி வரை மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது.

IPL 2022 (2)

- Advertisement -

இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளும் தீவிர பயிற்சிக்குப்பின் தயாராகி உள்ளன. இந்த நிலையில் இந்த தொடரின் 2-வது நாளில் 2 போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளன.

டெல்லி – மும்பை மோதல்:
அதில் மார்ச் 27-ஆம் தேதியன்று நடைபெறும் 2-வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான இளம் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் 5 முறை கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டியில் அபாரமாக செயல்பட்டு வெற்றி ருசித்து இந்த வருட ஐபிஎல் தொடரை வெற்றியுடன் துவங்குவதற்காக இரு அணிகளும் தீவிரமாக போராடும் என்பதால் இப்போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த போட்டியில் களமிறங்கப் போகும் மும்பை மற்றும் டெல்லி ஆகிய அணிகளின் உத்தேச 11 பேரை பற்றி பார்ப்போம்.

mivsdc

டெல்லி கேபிட்டல்ஸ்:
1. ஓப்பனிங்: டெல்லி அணிக்கு தொடக்க வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட நட்சத்திரம் டேவிட் வார்னர் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதிக்கு பின்புதான் டெல்லி அணியில் இணைய உள்ளார். எனவே அதுவரை நிலைமையை சமாளிக்க முதல் தொடக்க வீரராக களமிறங்கும் பிரிதிவி ஷா’வுடன் நியூசிலாந்தின் அதிரடி வீரர் டிம் ஷைபர்ட் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

2. மிடில் ஆர்டர்: 3-வது இடத்தில் கடந்த வருடம் பெங்களூர் அணிக்காக அசத்திய கேஎஸ் பரத் அல்லது சமீபத்தில் நடந்த அண்டர்-19 உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்ற இளம் கேப்டன் வீரர் யாஷ் துள் களம் இறங்கலாம். 4-வது இடத்தில் டெல்லி அணியின் நட்சத்திரம் மற்றும் விக்கெட் கீப்பர் கேப்டன் ரிசப் பண்ட் விளையாட உள்ளார். 5-வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் அதிரடி வீரர் ரோவ்மன் போவெல் ஃபினிஷராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 6-வது இடத்தில் சமீபத்திய ரஞ்சி கோப்பையில் அதிரடியாக விளையாடி அபாரமான பார்மில் இருக்கும் இந்திய வீரர் சர்ப்ராஸ் கானுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என நம்பப்படுகிறது. அவர் இல்லையெனில் மற்றொரு இளம் வீரர் லலித் யாதவ் களம் இறங்கலாம்.

Dc

3. பவுலர்கள்: கடந்த வருடம் வரை டெல்லி அணியில் முக்கிய சுழல் பந்து வீச்சாளராக வலம் வந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இப்போது அந்த அணியில் இல்லை. எனவே ஏற்கனவே விளையாடிய அக்ஷர் பட்டேலுடன் குல்தீப் யாதவ் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். வேகப்பந்து வீச்சு கூட்டணியில் தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பவுலர் அன்றிச் நோர்ட்ஜெ முதல் போட்டிக்கு தயாராகவில்லை என்பதால் மற்றொரு தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடியுடன் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் லுங்கி நிகிடி விளையாடவில்லை எனில் அவருக்கு பதில் மற்றொரு இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் சேட்டன் சக்காரியா விளையாடலாம். இவருடன் 3-வது வேகப்பந்து வீச்சாளராக ரசிகர்களால் “லார்ட்” என கொண்டாடப்படும் ஷார்துல் தாகூர் விளையாடுவார் என நம்பலாம்.

- Advertisement -

dc

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் உத்தேச 11 பேர் அணி இதோ: பிரிதிவி ஷா, டிம் ஷைபார்ட்*, கேஎஸ் பரத்/யாஷ் துள், ரிஷப் பண்ட் (கேப்டன் & கீப்பர்), ரோவ்மன் போவெல்*, சர்ப்பிராஸ் கான்/லலித் யாதவ், அக்சர் படேல், ஷார்துல் தாகூர், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான்*, சேட்டன் சகாரியா/லுங்கி நிகிடி*. (*= வெளிநாட்டு வீரர்கள்)

மும்பை இந்தியன்ஸ்:
1. ஓப்பனிங்: மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்தவித சந்தேகமும் இன்றி முதல் தொடக்க வீரராக 15.25 என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டு சாதனை படைத்த இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிசான் களம் இறங்குவார். அவருடன் மும்பை அணியின் முதுகெலும்பு ரோகித் சர்மா விளையாடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -

MI

2. மிடில் ஆர்டர்: மிடில் ஆர்டரில் குறிப்பாக 3-வது இடத்தில் சூர்யகுமார் யாதவ் காயத்தால் அவதிப்படுவது மும்பைக்கு பின்னடைவாகும். எனவே அந்த இடத்தில் வெளிநாட்டு ஆல்ரவுண்டர் டிம் டேவிட் விளையாடலாம். 4 மற்றும் 5 ஆகிய இடங்களில் திலக் வர்மா, அன்மோல்ப்ரீத் சிங் ஆகிய இளம் வீரர்களை களமிறக்கும் கட்டாயத்திற்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது. 6-வது இடத்தில் அதிரடி வீரர் கைரன் பொல்லார்ட் பினிஷெராக செயல்படுவார்.

3. பவுலர்கள்: சுழல் பந்து வீச்சாளராக தமிழகத்தைச் சேர்ந்த சஞ்சய் யாதவ் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோர் ஜோடியாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லையெனில் இவர்களில் யாராவது ஒருவருக்கு பதிலாக மயங்க் மர்கண்டே விளையாடுவார். இவருடன் முதல் வேகப்பந்து வீச்சாளராக நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா நிச்சயமாக விளையாடுவார் என்ற நிலையில் அவருடன் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் டைமல் மிஸ்ஸ் மற்றும் டேனியல் சம்ஸ் ஆகியோர் களம் இறங்குவார்கள் என நம்பலாம்.

ishan
ishan MI

மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச 11 பேர் அணி இதோ:
இஷான் கிசான் (கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), டிம் டேவிட்*, திலக் வர்மா, அன்மோல்ப்ரீட் சிங், கைரன் பொல்லார்ட்*, டேனியல் சாம்ஸ்*, சஞ்சய் யாதவ்/மயங் மார்கண்டே, முருகன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ்*. (*=வெளிநாட்டு வீரர்கள்).

Advertisement