சூப்பர் ஓவர் வரை சென்று தோற்க வார்னர் செய்த இந்த தவறே காரணம் – விவரம் இதோ

Warner
- Advertisement -

நேற்றைய ஐபிஎல் போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக நடைபெற்றது. சேப்பாக்கத்தில் இரவு போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலாவதாக டெல்லி அணி பேட்டிங் செய்தது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் 28 ரன்கள் மற்றும் பிரித்து ஷா 37 ரன்கள் அடிக்க டெல்லி அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. அதன் பின்னர் ரிஷப் பண்ட் 59 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 34 ரன்கள் அடிக்க டெல்லி அணியால் 20 ஓவர்களில் 159 ரன்கள் குவிக்க முடிந்தது.

dc

- Advertisement -

டெல்லி அணி நிர்ணயித்த இலக்கை சேஸ் செய்த ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் தடுமாறியது. நம்பிக்கை வீரர் வார்னர் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இளம் வீரர் விராட் சிங் மிக மெதுவாக விளையாடி பந்துகளை வீண் ஆக்கினார். அதன் பின்னர் பேர்ஸ்ட்ரோ 38 ரன்கள், கேன் வில்லியம்சன் 66 ரன்கள் இவர்கள் இருவரை தொடர்ந்து இறுதியாக சுஜித் அதிரடியாக விளையாடி 14 ரன்கள் குவிக்க ஆட்டம் சமனில் முடிவடைந்தது.

போட்டி டை ஆன காரணத்தினால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது. இதில் முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த ஓவரை அக்ஷர் பட்டேல் மிக அற்புதமாக வீசி ஹைதராபாத் அணி வீரர்களை ரன்கள் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தினார்.

axar

பின்னர் டெல்லி அணியில் இருந்து விளையாட வந்த ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான் கடைசி பந்து வரை ஆட்டத்தை எடுத்துச் சென்று இறுதியில் 8 ரன்கள் அடித்து டெல்லி அணியை வெற்றி பெறச் செய்தனர். அந்த ஓவரை வீசிய ரசித் கானால் ஏழு ரன்களுக்குள் அந்த அணியை கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணியில் விளையாடிய பேர்ஸ்டோ மிக அற்புதமாக அனைத்து பந்துகளையும் அடித்து விளையாடினார். நேற்று சூப்பர் ஓவருக்கு ஆட்டம் சென்ற வேளையில் வில்லியம்சன் உடன் கண்டிப்பாக பேர்ஸ்டோ தான் விளையாட வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

bairstow

ஆனால் கேப்டன் வார்னர் விளையாட வந்தார். அவர் வந்து எந்தவித பவுண்டரி மற்றும் சிக்சரை அடிக்கவில்லை. ஒருவேளை நேற்று சூப்பர் ஓவரில் வார்னர்க்கு பதிலாக பேர்ஸ்டோ வந்து இருந்தால் கண்டிப்பாக அந்த ஓவரில் ஒரு சிக்சர் பறந்து இருக்கும். எனவே வார்னர் செய்த தவறால் தான் நேற்று ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது என அனைத்து ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வார்னரை திட்டி வந்த வண்ணம் இருக்கின்றனர்.

Advertisement