ஐ.பி.எல் தொடரில் 10 வினாடி விளம்பர கட்டணம் எவ்வளவு தெரியுமா ? – மொத்த லாபம் இத்தனை கோடியா ?

ipl
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அளவில் வருமானம் ஈட்டும் வாரியமாக இந்திய கிரிக்கெட் வாரியம் திகழ்கிறது. 2008-ம் ஆண்டு ஐபிஎல் என்ற டி20 லீக்கை அறிமுகம் படுத்தியது. இது கோடிக்கணக்கில் வீரர்களை ஏலம் எடுத்து 8 அணிகள் கலந்து கொள்ளும் தொடராக நடத்தப்படுகிறது. இந்தத் தொடர் உலகளவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. விளம்பரம் மூலம் கோடிக்கணக்கான பணம் கிடைக்கிறது. உலகின் அதிக வருமாணம் ஈட்டும் டி20 லீக்காக ஐபிஎல் திகழ்கிறது.

IPL-1

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடர்களை ஒளிபரப்பு செய்யும் உரிமை ஆரம்பத்தில் சோனி நிறுவனத்தின் வசமிருந்தது. ஆனால் 2017 ஏலத்தின் போது ஐபிஎல் தொடர்களை ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றது. ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளின் இடையில் ஒளிபரப்பப்படும் விளம்பரத்திற்காக அந்தச் சேனல் விளம்பரதாரர்களிடம் பணம் வசூல் செய்யும். இந்த மதிப்பானது ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே செல்லும்.

அதேபோல் இந்த வருடமும் ஐபிஎல் ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமானது போட்டிகளுக்கு இடையில் ஒளிபரப்பு செய்யப்படும் விளம்பரத்திற்கான தொகையை அதிகரித்துள்ளது. அதன்படி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமானது 10 வினாடிகள் ஒரு விளம்பரத்தை ஒளிபரப்பு செய்ய ரூபாய் 14 லட்சத்தை கட்டணமாக நிர்ணயித்துள்ளது.

starsport

இதன் மூலம் இந்த மொத்த ஐபிஎல் போட்டிகளிலும் ஒளிபரப்பு செய்யப்படும் விளம்பரங்களினால் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனமானது ரூபாய் 3600 கோடியிலிருந்து 3800 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டும் எனக்கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளை 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு செய்யும் உரிமையை 2018 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமானது இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் ரூபாய்.16,347.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Hot-star

ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே போல் ஐபிஎல்லின் மூலம் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்கும் பணமும் ஒவ்வொரு வருடமும் கணிசமான அளவில் உயர்ந்து கொண்டே வருவதால் உலகிலேயே அதிக செல்வம் ஈட்டும் கிரிக்கெட் வாரியமாக இந்திய கிரிக்கெட் வாரியம் திகழ்கிறது.

Advertisement