இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிய 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

ipl-2021

ஐபிஎல் 14வது சீசன் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த தொடரில் 22 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த தொடரானது இரண்டாவது கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொராணாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் பல வீரர்கள் இந்தத் தொடரிலிருந்து வெளியேறி வருகின்றனர். அப்படி வெளியேறிய வீரர்களைப் பற்றி இங்கே காணலாம்.

Ashwin

ரவிச்சந்திரன் அஷ்வின் :

- Advertisement -

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கிய வீரராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 26ஆம் தேதி இந்த ஐபிஎல்லில் எஞ்சியிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கொரானா பரவலின் போது தனது குடும்பத்துடன் இருந்து, அவர்களை பார்த்துக் கொள்வதற்காக செல்கிறேன் என்று அறிவித்த அவர், எல்லாம் சரியாக சென்றால் ஐபிஎல்லின் பிற்பகுதியில் அணிக்குள் இணைவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார். டெல்லி அணி இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் அந்த அணியின் முக்கிய பவுலராக இருந்து வந்தார் ரவிச்சந்திரன் அஷ்வின். இந்த தொடரில் கடைசியாக அவர் ஹைதராபாத் அணிக்காக சென்னை மைதானத்தில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Zampa

ஆடம் ஜாம்பா :

- Advertisement -

இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் ஒரு ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலர் ஆவார். ஆனால் பெங்களூர் அணி விளையாடிய முதல் ஐந்து போட்டிகளிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கிடையில் தனது சொந்த பிரச்சனை காரணமாக நாடு திரும்புவதாக அறிவித்திருக்கிறார் ஆடம் ஜாம்பா. இதை ஏற்றுக் கொண்ட பெங்களூர் அணி நிர்வாகமும் அவருக்கு நாடு திரும்ப முழு ஒத்துழைப்பையும் அளித்திருப்பதாக அறிவித்திருந்தது.

Livingstone

லியாம் லிவிங்ஸ்டன் :

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இங்கிலாந்து வீரனான இவர் கடந்த 20ஆம் தேதியே தனது சொந்த நாட்டிற்கு சென்று விட்டார். கொரனாவிற்காக எற்படுத்தப்பட்டுள்ள பயோ–பபுள் என்றழைக்கப்படுகின்ற பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்து உளவியல் ரீதியாக தான் சோர்வடைந்துள்ளதாகவும், அதனால் நீண்ட நாட்கள் என்னால் இப்படியே இருக்க முடியாது என்று காரணம் சொல்லியும், அணியிலிருந்து விலகிவிட்ட லியாம் லிவிங்ஸ்டனின் முடிவிற்கு எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரை சொந்த நாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம்.

Richardson

கேன் ரிச்சார்ட்சன் :

ஆஸ்திரேலிய அணியின் பாஸ்ட் பௌலரான இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்தார். இந்த தொடரில் பெங்களூர் விளையாடிய நான்காவது போட்டியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் சிறப்பாக செயல்படாத ரிச்சார்ட்சன் தன் சொந்த பிரச்சனைகளின் காரணமாக நாடு திரும்புவதாக அறிவித்திருக்கிறார்.

Tye

ஆண்ட்ரு டை :

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான இவர், ஆஸ்திரேலியாவில் உள்ள தனது சொந்த மாகானமான பெர்த்தில் ஏற்பட்டிருக்கும் கொரனா விதிமுறை மற்றும் இந்தியாவில் ஏற்பட்டு வரும் அதிகமான தொற்றினால் நான் மிகவும் பயப்படுகிறேன் என்று காரணங்களை கூறிவிட்டு, இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே அந்த அணியில் காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் இந்த தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில் இப்போது இவரும் விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்கப்படுகிறிது.

Advertisement