சைலண்டா சி.எஸ்.கே அணிக்காக மிகப்பெரிய சாதனையை படைத்த சுரேஷ் ரெய்னா – விவரம் இதோ

raina 1

மும்பையில் வான்கடே மைதானத்தில் நடந்த நேற்றைய போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் குவித்தது. ருதுராஜ் 33 ரன்களும் டுப்லஸ்ஸிஸ் 50 ரன்களும் எடுத்து அணியின் தொடக்கத்தை பலப்படுத்தினார். அதன் பின்னர் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 24 ரன்களும், அம்பத்தி ராயுடு 14 ரன்களும் குவித்தனர்.ரவீந்திர ஜடேஜா 28 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயிர்த்த உதவினார். அதிலும் குறிப்பாக இறுதி ஓவரில் 37 ரன்கள் பறக்க விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி அதனுடைய கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வெகு சீக்கிரத்தில் இழந்தது. கேப்டன் விராட் கோலி 8 ரன்கள் எடுத்து அவுட் ஆகி சென்றார். அந்த அணியில் படிக்கல் மற்றும் மேக்ஸ்வெல் மட்டும் நிதானமாக விளையாடினார். மேக்ஸ்வெல் 22 மற்றும் படிக்கல் 34 ரன்கள் எடுத்து அவர்களும் அவுட் ஆக அந்த அணியின் வீரர்கள் அதற்கு அடுத்து வரிசையாக அவுட்டாகி கொண்டே சென்றனர்.

இதன் காரணமாக பெங்களூரு அணியால் 20 ஓவர் முடிவில் வெறும் 122 ரன்கள் மட்டும் தான் குவிக்க முடிந்தது. இதன் காரணமாக இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் புள்ளி பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

raina

சுரேஷ் ரெய்னா நேற்றைய போட்டியில் 2 சிக்சர்கள் அடித்தார். அவர் அடித்த முதல் சிக்சர், அவருடைய 200வது சிக்சர் ஆகும். இதன் மூலம் இந்திய வீரர்கள் மத்தியில் 200 சிக்சர் அடித்த நான்காவது வீரர் என்ற சாதனையை அவர் நேற்று புரிந்தார். இதற்கு முன்னர் மகேந்திர சிங் தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி மட்டுமே ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்கள் அடித்து இருந்தார்கள்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் :

354 – கிறிஸ் கெயில்
240 – டிவில்லியர்ஸ்
222 – ரோகித் சர்மா
217 – மகேந்திர சிங் தோனி
204 – விராட் கோலி
202 – கைரன் பொலார்ட்
201 – சுரேஷ் ரெய்னா
199 – டேவிட் வார்னர்