சன் ரைசர்ஸ் அணியில் இந்த பிரச்சனை இருக்கும் வரை அவங்களால ஒரு போட்டியில் கூட ஜெயிக்க முடியாது – விவரம் இதோ

SRH

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது, இந்த தொடரில் தனது ஐந்தாவது தோல்வியை பதிவு செய்திருக்கிறது. இத்தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி, ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 2019 ஐபிஎல் சீசன் மற்றும் அதற்கு முந்தைய சீசன்களில் பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் சம பலம் வாய்ந்த அணியாக இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கடந்த சீசனில் இருந்து அந்த அணியில் உள்ள வீரர்களின் சீரற்ற செயல்பாடுகளால் சொதப்பிக்கொண்டு வருகிறது.

CSKvsSRH

இப்படியே சென்று கொண்டிருந்தால் இனிமேல் அந்த அணியால் இனி ஒரு மேட்சில்கூட வெற்றிபெற முடியாது என்று கூறிவருகின்றனர் அந்த அணியின் ரசிகர்களும், கிரிக்கெட் விமர்ச்சகர்களும். இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இருந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய சில போட்டிகளில் அந்த அணி வீர்ர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தோல்வியைச் சந்தித்தது. அதற்குப் பிறகாவது அந்த அணி வீரர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நினைத்தபோதும்கூட மீண்டும் அதே தவறுகளை செய்து தோல்வியையே பரிசாக பெற்று தருகின்றனர்.

அந்த அணியின் பேட்டிங் ஆர்டரில் கேன் வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தாலும், அணியின் கேப்டனான டேவிட் வார்னர் விக்கெட் விழாமல் தடுக்கிறேன் என்ற ரீதியில் விளையாடி பவர்ப்ளே ஓவர்களில் அதிக ரன்களை அடிக்க மறுக்கிறார். மேலும் நேற்று நடந்த போட்டியிலும், அதற்கு முந்தைய டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் கேப்டன்சியிலும் கோட்டைவிட்டிருக்கிறார் டேவிட் வார்னர். அணிக்குள் இருக்கும் மற்ற வீரர்களான மணிஷ் பாண்டேவும், விஜய் ஷங்கரும் தேவையான நேரத்தில் அதிரடியாக ஆட தவறிவிடுகின்றனர்.

Williamson

அதனால் அந்த அணியானது ஒரு பெரிய ஸ்கோருக்கு ஜானி பேர்ஸ்டோவையும், கேன் வில்லியம்சனையும் மட்டுமே நம்பி உள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பௌலிங் யூனிட்டைப் பொறுத்தவரை நம்பிக்கை நட்சத்திரங்களான புவனேஷ்வர் குமாரும், நடராஜனும் விளையாட முடியாமல்போனது அந்த அணிக்கு மிகப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இப்போது அந்த அணயில் இருக்கும் பிரதான பௌலர் ரஷீத் கான் மட்டுமே. அவரைத் தவிர மற்ற எந்த பௌலர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

- Advertisement -

ஆனால் ஒரே ஒரு பௌலரை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு அணியால் வெற்றி பெறுவதென்பது இயலாத காரியமாகும். இப்படி பேட்டிங் பௌலிங் என இரண்டிலும் அந்த அணி சில வீரர்களை மட்டுமே நம்பி இருந்தால் இனி வரும் போட்டிகளில் ஒரு வெற்றியைக்கூட பெற முடியாது என்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது.

Rashid

இந்தத் தொடரில் தான் விளையாடிய ஆறு போட்டிகளில், ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற மீதமிருக்கும் 8 போட்டிகளில் 7 போட்களில் கட்டாயமாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளது. அதுவும் வெற்றி பெற்றால் மட்டும் போதாது, அதிகமான ரன் ரேட்டிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.