ரிஷப் பண்ட் இந்த விஷயத்தில் கோட்டை விட்டு வருகிறார். அதனால் அவருக்கு 3 மார்க் தான் கொடுப்பேன் – சேவாக் மதிப்பீடு

Sehwag
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில், டெல்லி அணியை ரிஷப் பண்ட் தலைமை தாங்கி வருகிறார். இடது கையில் ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் தற்பொழுது அறுவை சிகிச்சை முடித்து ஓய்வு பெற்று வருகிறார். அவரால் இனி மூன்று – நான்கு மாதங்கள் விளையாட முடியாத காரணத்தினால், டெல்லி அணி நிர்வாகம் தலைமை தாங்கும் பொறுப்பை ரிஷப் பண்ட் இடம் கொடுத்தது.

Pant

- Advertisement -

இந்நிலையில் ரிஷப் பண்ட் கேப்டனாக இந்த தொடரில் எப்படி விளையாட போகிறார், மேலும் அணியை எவ்வாறு தலைமை தாங்க போகிறார் என்று அனைவரும் கேள்வி எழுப்பி விவாதித்து வந்தனர். அவர்கள் அனைவருக்கும் பதில் சொல்லும் விதமாக முதல் ஐந்து போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று பண்ட் அசத்தினார்.

ஆனால் நேற்று நடந்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி இடம் டெல்லி அணி தோல்வி பெற்றது. இதற்கு பல்வேறு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் நேற்று ரிஷப் பண்ட் சரியாக தலைமை தாங்கவில்லை. அதன் காரணமாகவே நேற்று டெல்லி அணி ஜெயித்திருக்க வேண்டிய போட்டியை கோட்டை விட்டுள்ளது என்று கூறி வருகின்றனர்.

pant 2

நேற்று போட்டி முடிந்தவுடன் சேவாக் ரிஷப் பண்ட் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அனைத்துப் போட்டிகளிலும் நான் அவரை பார்க்கிறேன், என்னை பொறுத்தவரையில் அவர் அவ்வளவு சிறப்பாக அணியை தலைமை தாங்கவில்லை. ஒரு அணிக்கு நல்ல கேப்டன் எப்பொழுதும் ஸ்மார்ட்டாக யோசிக்க வேண்டும்.

எந்த நேரத்தில் எந்த மாதிரியான பீல்டிங் வளையத்தை முன்னெடுத்து வருவது, அதேபோல பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப எந்த பந்து வீச்சாளரை பந்து வீச வைப்பது என அனைத்து நேரத்திலும் ஸ்மார்ட்டாக யோசித்து செயல்பட வேண்டும். அதை ரிஷப் பண்ட் செய்ய தவறி இருக்கிறார். ஒரு நல்ல கேப்டன் நன்றாக விளையாடுவதை விட, அணியை சிறப்பாக தலைமை தாங்க வேண்டும், இரண்டுமே மிகவும் அவசியம். எனவே இவற்றின் அடிப்படையில் ரிஷப் பண்ட் கேப்டன்சிக்கு பத்துக்கு மூன்று மார்க்கு தான் என்னால் கொடுக்க முடியும் என்று இறுதியாக கூறி முடித்தார்.

Advertisement