வினோதமான மாற்றம் தந்த அகமதாபாத் மைதானம். போட்டி பாதியில் நிறுத்தம் – என்னப்பா நடக்குது இங்க ?

Kohli-2

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான 22-வது லீக் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு செல்லும் என்பதால் இந்த போட்டியை ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் முடிவடைந்துள்ளது.

RCBvsDC

அதன்படி டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்து உள்ளது. இதன் காரணமாக 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு அணி சார்பாக அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் 42 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரி என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 75 ரன்கள் குவித்து டெல்லி அணிக்கு பயத்தைக் காண்பித்தார். மேலும் அவருக்கு துணை நின்ற படித்தார் 31 ரன்களும், மேக்ஸ்வெல் 25 ரன்களும் குவித்தனர்.

தற்போது 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாட தயாராகியுள்ளது. ஆனால் இந்த வேளையில் தற்போது முதல் பாதி முழுவதும் சாதாரணமாக இருந்த அகமதாபாத் மைதானம் தற்போது முழுவதுமாக பனிமூட்டம் மற்றும் அதிவேக காற்று என வித்தியாசமான ஒரு மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது 2வது இன்னிங்சை தொடங்க தாமதமாகியுள்ளது.

- Advertisement -

Kohli-1

டெல்லி அணியின் துவக்க வீரர்கள் தயாராக இருந்தும் காற்றில் நிற்காமலும், மைதானம் முழுவதும் பனி மூட்டம் காணப்படுவதால் அம்பயர்கள் போட்டியை நடத்தலாமா ? வேண்டாமா ? என்பது குறித்து தற்போது ஆலோசித்தனர். மேலும் இதன் காரணமாக போட்டி தற்போது 10 நிமிடங்களுக்கு மேலாக போட்டி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் தற்போது நிலைமை சீராகி போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.