ஹெட்மயர் காட்டிய மரண பயம். ஒரு ரன் வித்தியாசத்தில் கை மாறிய வெற்றி

hitmayar

ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி டிவில்லியர்ஸ்-இன் பிரமாண்டமான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது.

abd

அதிகபட்சமாக 42 பந்துகளை சந்தித்த டிவில்லியர்ஸ் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் என 75 ரன்கள் குவித்தார். பட்டிதார் 31 ரன்களையும், மேக்ஸ்வெல் 25 ரன்களையும் அடித்து கொடுத்து பெங்களூரு அணிக்கு கை கொடுத்தனர். அதன்பிறகு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி இந்த சவாலான இலக்கை நோக்கி சற்று நிதானமாகவே ஆட்டத்தை துவங்கியது.

இந்த போட்டியில் துவக்க வீரர் ஷிகர் தவான் 6 ரன்களிலும், பிரித்வி ஷா 21 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் சிராஜின் சிறப்பான பந்து வீச்சினால் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு மர்கஸ் ஸ்டாய்னிஸ் 22 ரன்கள் ஆட்டமிழந்து வெளியேற ரிஷப் பண்ட் மற்றும் ஹெட்மையர் ஆகியோர் சற்று அதிரடியாக விளையாடினர்.

இறுதியில் கடைசி ஓவரின் போது 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரிஷப் பண்ட்டால் 12 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் காரணமாக கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி பிரமாதமான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணி சார்பாக இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹெட்மையர் 25 பந்துகளில் 53 ரன்களும், பண்ட் 48 பந்துகளை சந்தித்து 58 ரன்களும் குவித்தனர்.

hetmyer 1

- Advertisement -

இதன் காரணமாக பெங்களூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில்லிங்கான வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது. பரபரப்பான இந்த போட்டியில் இறுதி நேரத்தில் டெல்லி அணியின் வெற்றிக்கு அருகில் எடுத்துச் சென்றும் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணியின் சூப்பர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.