மற்ற அணிகளிடம் இருந்து பிளேயர்ஸ்ஸை கேட்டு கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்ட ஐ.பி.எல் அணி – இவங்களுக்கா இந்த நிலைமை

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கடந்த 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களான ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி விட்டனர். மேலும் அந்த அணியின் மற்ற இரு வீரர்களான லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஆண்ட்ரு டை ஆகியோரும் சில காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகிவிட்டதால் அந்த அணியில் வெளிநாட்டு வீரர்களுக்கான இடப் பற்றாக்குறை நிலவுகிறது.

Stokes

தற்போது அந்த அணியில் ஜோஸ் பட்லர், டேவிட் மில்லர், மோரிஸ் மற்றும் முஸ்டஃபிசுர் ரஹ்மான் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் யாரேனும் ஒருவருக்கு விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும் அந்த அணியானது பரிதாபகரமான நிலைக்கு சென்றுவிடும். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்ற அணி நிர்வாகங்களிடம் வெளிநாட்டு வீரர்களை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல் தொடர் ஆரம்பித்து குறிப்பிட்ட போட்டிகள் முடிந்ததும், இரு அணி நிர்வாகங்கள் தங்களுக்கு இடையில் வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என்ற விதிமுறையின்படி ராஜஸ்தான் அணியானது மற்ற அணிகளிடம் வீரர்களை கேட்டுள்ளது. இந்த விதிமுறையின்படி மற்ற அணிகளில் நடப்பு தொடரில் மூன்று போட்டிகள் அல்லது அதற்கும் குறைவாக விளையாடியுள்ள வீரர்களை, அணி நிர்வாகம் மற்ற அணிக்கு வழங்கலாம்.

Tye

ஆனால் அந்த வீரரால் நடப்பு தொடரில் அந்த அணிக்கு எதிராக விளையாட இயலாது. இதுபற்றி கிரிக்பஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்த இரண்டு அணி நிர்வாகங்களின் சி.இ.ஓக்கள் ராஜஸ்தான் அணி தங்களிடம் வெளிநாட்டு வீரர்களை கேட்டுள்ளதாகவும், அதைப்பற்றி நாங்கள் பரிசீலித்து கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

- Advertisement -

morris 1

நடப்பு தொடரில் வீரர்களை மாற்றிக் கொள்ளும் இந்த விதிமுறையானது கடந்த ஏப்ரல் 26ம் தேதி 9 மணியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்பது.