20 ஆவது ஓவரை வீச ஸ்டாய்னிசை அழைத்ததன் காரணம் இதுதான் – ரிஷப் பண்ட் கொடுத்த விளக்கம்

stoinis

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று இரவு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் செய்த ஒரு சிறிய தவறால் டெல்லி அணி இந்த மோசமான தோல்வியை தழுவியுள்ளது.

stonis 1

அதன்படி இருபதாவது ஓவரை வீச ஸ்டாய்னிசை அழைத்து தான் தோல்விக்கு காரணம் என சில கருத்துகள் இணையத்தில் உலாவி வருகின்றன. ஏனெனில் 19வது வரை ஓரளவு சீரான ரன் குவிப்பில் இருந்த பெங்களூரு அணியின் கடைசி ஓவரில் 23 ரன்கள் அடிக்க இறுதியில் டெல்லி அணிக்கு 172 ரன்கள் அடித்தால் என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த போட்டியில் அமித் மிஸ்ராவுக்கு ஒரு ஓவர் இருக்கும் நிலையில் அவருக்கு பந்துவீச கொடுக்காத ரிஷப் பண்ட் கடைசி ஓவரில் யாரை அழைப்பது என்று தெரியாமல் ஸ்டாய்னிஸை அழைக்க அந்த ஓவரில் களத்தில் இருந்த ஏ.பி.டி 23 ரன்கள் அடிக்க அந்த ஒரு ஓவர் டெல்லி அணிக்கு பாதகமாக அமைந்தது.

abd 1

இந்நிலையில்தான் ஏன் 20-தாவது ஓவரை வீச ஸ்டாய்னிசை வீச அழைத்தேன் என்பது குறித்து போட்டி முடிந்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்தார். அதன்படி அவர் கூறுகையில் :

- Advertisement -

pant

இந்தப் போட்டியின் போது நாங்கள் ஓவர்களை கணக்கிட்டுக் கொண்டே தான் வந்தோம். இருப்பினும் போட்டியின் இறுதி நேரத்தில் ஸ்பின்னர்களுக்கு இந்த மைதானத்தில் உதவி கிடைக்காது என்று நினைத்ததால் தான் ஸ்டாய்னிஸ் இடம் பந்தை கொடுத்தேன் என்று கூறியுள்ளார். அவர் கொடுத்த இந்த ஓவர் போட்டியை மாற்றும் என்று அவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.