வீரர்களை தொடர்ந்து ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய 2 அம்பயர்கள் – காரணம் இதுதான்

Umpire
- Advertisement -

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று மிக அதிகரித்து கொண்டே வருகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு இந்தியாவில் மட்டும் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றனர்.இது ஒரு பக்கம் கவலையை ஏற்படுத்த, மறுபக்கம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை நிலவரம் அனைத்து மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா கை மீறி விட்டது என கருதிய ஆஸ்திரேலியா வீரர்கள் ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன்
மற்றும் அன்ட்ரூ டை ஆகியோர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி தங்கள் நாட்டுக்கு சென்று விட்டனர்.

ipl-2021

- Advertisement -

மறுபக்கம் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது குடும்பத்திற்கு ஆதரவாக தற்பொழுது தான் இருக்க வேண்டும் என கூறிக்கொண்டு, ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இன்னொரு அதிர்ச்சியாக வீரர்களை தொடர்ந்து போட்டி நடுவர்களும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற தொடங்கியுள்ளனர்.

தற்பொழுது உள்ள இந்திய நடுவர்களில் மிக தலைசிறந்த நடுவராக நிதின் மேனன் விளங்கி வருகிறார். ஐசிசி எலைட் லிஸ்ட் நடுவர்களின் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய நடுவர் நிதின் மேனன் ஆவார். போட்டியில் அவர் கணிப்புகள் மிக சரியாக இருக்கும். அவரது கணிப்புக்களில் பெரிய தவறுகள் இருக்காது. முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் அவரது கணிப்பை கண்டு பாராட்டுவார்கள்.

nitin

இந்நிலையில் நிதின் மேனன் அவருடைய மனைவி மற்றும் தாயார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தன்னுடைய உதவி அவர்களுக்கு தேவை என கூறிக்கொண்டு ஐபிஎல் தொடரில் இருந்து நேற்று வெளியேறி உள்ளார். அவரைப்போலவே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடுவர் பால் ரெய்பல் நேற்று வெளியேறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அரசாங்கம் அங்கே ஊரடங்கு போட உள்ளதால், ஊரடங்கு போடுவதற்கு முன்பே ஆஸ்திரேலியா செல்ல அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மே 15ஆம் தேதிக்கு மேல் இந்தியாவில் இருந்து வரும் ஆஸ்திரேலிய விமானங்கள் நிறுத்தப்போவதாக எழுந்த செய்தியைக் கேட்டு, உடனடியாக ஆஸ்திரேலியா செல்ல அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி வீரர்களை தொடர்ந்து நடுவர்களும் அடுத்தடுத்து தொடரிலிருந்து வெளியேறுவதால் ஒருவேளை ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டு விடுமோ என ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement