அம்பயர்களால் ஏற்படும் பிரச்சனையை தவிர்க்க பி.சி.சி.ஐ கொண்டுவந்துள்ள 2 புதிய ரூல்ஸ் – விவரம் இதோ

IPL-1
- Advertisement -

14வது ஐபிஎல் லீக் தொடர் வருகிற ஏப்ரல் 9ம் தேதி தொடங்கப்பட்டு மே 30-ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற ஐபிஎல் தொடரில் இரண்டு முக்கிய மாற்றங்களை பிசிசிஐ ஏற்படுத்தியுள்ளது. அதில் முதல் மாற்றம் ஆன் ஃபீல்டு அம்பயர்களின் சாப்ட் சிக்னல் விதிமுறையை மாற்றியுள்ளது இரண்டாவதாக ஷார்ட் ரன்கள் குறித்த விஷயத்தை 3வது அம்பயர் தான் முடிவெடுக்க வேண்டும் என்கிற விதியை ஏற்படுத்தி உள்ளது.

umpire kohli 1

- Advertisement -

மைதானத்தில் வீரர்கள் கேட்ச் பிடிக்கும் பொழுது ஆன் பீல்டு அம்பயர்கள் தங்களது முடிவை சாப்ட் சிக்னல் மூலமாக ஒரு முடிவை கொடுத்ததை அடுத்து, அதை உறுதிப்படுத்திக் கொள்ள மூன்றாவது அம்பயர்களிடம் முடிவை திரும்ப கேட்பார்கள். அப்பொழுது மூன்றாவது அம்பயர் முடிவை சரியாக எடுக்க முடியாத பட்சத்தில் அல்லது மிக சிக்கலான வகையில் முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டால் 3வது அம்பயர் வேறு வழியின்றி ஆன் பீல்டு அம்பயர்களின் முடிவையே இறுதி முடிவாக அறிவித்து விடுவார்.

இப்படித்தான் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் சூரியகுமார் யாதவின் அடித்த பந்தை கேட்ச் பிடித்த டேவிட் மலன் , பந்தை தரையில் படுமாறு கேட்ச் பிடித்தார். அப்போது மைதானத்தில் இருந்த ஆன் பீல்டு அம்பயர்கள் அதை அவுட் என்று தெரிவித்ததை அடுத்து மூன்றாவது அம்பயரும் அதை அவுட் என்று அறிவித்துவிட்டார். எனவே இந்த சிக்கலான விஷயங்களில் இருந்து வெளிவர பிசிசிஐ இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் ஆன் பீல்டு அம்பயர்களின் சாப்ட் சிக்னல் முறையை முற்றிலுமாக அகற்றி உள்ளனர். இது ரசிகர்கள் மற்றும் வீரர்கள் இடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

malan

பேட்ஸ்மேன்கள் வந்த அடுத்த பின்னர் ரன்கள் ஓடும் நிலையில் கிரீஸில் பேட்டை தொட்டுவிட்டு அடுத்து ரன்கள் ஓடவேண்டும்.அப்படி கிரீசில் பேட்டை சரியான வகையில் வைக்காமல் போனால் அந்த ரன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதையே ஷார்ட் ரன் பிரச்சினை என்று கூறுவர். இந்தப் பிரச்சினையை மைதானத்தில் இருக்கும் பீல்டு அம்பயர்கள் எடுக்க முடியாது அதை 3வது அம்பயர் தான் முடிவு செய்ய வேண்டும் என்கிற விதியை பிசிசிஐ கொண்டு வந்துள்ளது.

Umpire

சென்ற ஆண்டு டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்டதில் இந்த பிரச்சினை மிகப்பெரிய பிரச்சனையாக எழுந்ததை அடுத்து பிசிசிஐ அதை இந்த ஆண்டு மாற்றியுள்ளது.இதன் மூலம் ரன்கள் குறித்த பிரச்சினையை 3வது அம்பயர் தான் தெளிவாக மற்றும் நிதானமாக வீடியோ மூலம் பார்த்து முடிவு செய்தாக வேண்டும்.இந்த மாற்றமும் ரசிகர்களிடம் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement