ஆஸ்திரேலிய செல்வதை விட இப்போ இங்கிருப்பதே நல்லா இருக்கு – மும்பை வீரர் நச் பேட்டி

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இத்தொடரில் 21 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதே சமயம் இந்தியாவில் கொரானாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் இந்தியாவிற்கு உதவி வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் 3 ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பும் முடிவை எடுத்துள்ளனர்.

ஏற்கனவே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த கொரானா பரவலின் போது தன்னுடைய குடும்பத்துடன் இருப்பதே நல்லது என்றும், அவர்களை கவனமாக பார்த்துக்கொள்வதற்காக இந்தத் தொடரில் இருக்கும் மற்ற போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். கொரானா பரவல் காரணமாக ஐபிஎல்லில் விளையாடும் வீரர்களுக்கு பயோ பபுள் விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது.

இந்த விதிமுறையின்படி வீரர்கள் ஹோட்டலிலிருந்து மைதானத்திற்கும், மைதானத்திலிருந்து ஹோட்டலுக்கும் மட்டுமே வந்து செல்ல முடியும். மற்ற எந்த இடங்களுக்கும் செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இந்த விதிமுறை வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதால் இது கட்டாயமாக கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் சுதந்திரத்தை விரும்பும் வீரர்களால் இதுபோன்ற சூழ்நிலையை சமாளிக்க முடியாது. அதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கும் உள்ளாவார்கள்.

zampa

இந்த பயோ பபுள் வளையத்தில் தன்னால் இருக்க முடியாது என்று கூறி ஆஸ்திரேலிய அணியின் பாஸ்ட் பௌலரான ஆண்ட்ரு டை ஏற்கனவே இந்த தொடரில் இருந்து விலகி இருந்த நிலையில், தற்போது பெங்களூர் அணியில் இடம் பெற்றிருக்கும் மற்ற ஆஸ்திரேலிய வீரர்களான ஆடம் ஜாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தனது சொந்த பிரச்சனைகளின் காரணமாக நாடு திரும்புவதாக அறிவித்திருக்கிறார்கள். இப்படி ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி வரும் சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி பாஸ்ட் பௌலரான நாதன் கூல்டர் நைல் ஒரு கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

Coulternile

ஆண்ட்ரு டை, ஜாம்பா, ரிச்சார்ட்சன் ஆகியோர் நாடு திரும்புவதை பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் அவர்களிடம் சென்று நாடு திரும்புவதற்கான உண்மையான காரணம் என்னவென்று கேட்பது அவசியமாகும். என்னைப் பொறுத்தவரை இது போன்ற சூழ்நிலைகளில் நாடு திரும்புவதை விட பயோ பபுலில் பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது என்று நான் கருதுகிறேன் என்று கூறினார்.