போட்டியில உயிரை கொடுத்து விளையாடுன வீரர்களை தாண்டி மைதானத்தில் வீசிய புழுதி காற்றுக்கு நன்றி சொன்ன கோலி

Kohli

ஐபிஎல் தொடரின் நேற்றைய முக்கிய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் என்று என்பதனால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டியாக அமைந்தது. முதலில் விளையாடிய பெங்களூர் அணி துவக்கத்தில் அடுத்தடுத்து வீரர்களை இழந்தாலும் அதிரடி வீரரான டிவில்லியர்ஸ்ஸின் பொறுப்பான மற்றும் சிறப்பான ஆட்டத்தினால் இறுதியில் நல்ல ரன் குவிப்பை வழங்கியது.

abd 1

19ஆவது வரை சுமாராக சென்றுகொண்டிருந்த ரன் ரேட்டை 20ஆவது ஓவரில் 23 ரன்கள் அடித்து ஏபி டிவில்லியர்ஸ் சற்று வலுவான நிலைக்குக் கொண்டு சென்றால் ஒரு கட்டத்தில் பெங்களூர் அணி 160 ரன்களை மட்டுமே எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கூடுதலாக சில ரன்களை அடித்த ஏபி டிவில்லியர்ஸ் 20 ஓவர்களின் முடிவில் 171 ரன்கள் எடுத்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கிற்கு கொண்டு சென்றார்.

அதன்பிறகு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கத் தயாரானது. அப்போது போட்டியில் இரண்டாம் பாதி துவங்கும் முன்னர் மைதானத்தில் அதிவேக புழுதிகாற்று மற்றும் மந்தமான வானிலை காணப்பட்டது. மைதானத்தில் புழுதி காற்று அதிகமாக வீசியதால் வீரர்கள் யாரும் விளையாட தயாராக வில்லை. அதனால் போட்டி ஒரு பத்து நிமிடம் வரை தாமதமாகவே துவங்கியது.

motera

அதன் பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி இறுதிவரை போராடி கடைசியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சிறப்பாக விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஹெட்மையர் ஆகியோர் அரை சதம் அடித்தாலும் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட போது 12 ரன்கள் மட்டுமே அவர்களால் குவிக்க முடிந்ததால் இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அசத்தல் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி மைதானத்தில் வீசிய புயல் காற்றுக்கு நன்றி சொன்னது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. வெற்றிக்கு பிறகு பேசிய கோலி பல்வேறு விஷயத்தை பகிர்ந்து கொண்டாலும் அவரது இந்த பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. இது குறித்து அவர் கூறுகையில் : இன்றைய போட்டியில் டியூ இல்லாமல் போனது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. இன்று மைதானத்தில் டியூ வராமல் இருப்பதற்கு காரணம் இரண்டாவது பாதி துவங்கும் முன்னர் வீசிய புழுதி காற்று தான்.

rcbvsdc

மைதானத்தில் 10 நிமிடம் வரை வீசிய இந்த புழுதி காற்றினால் டியூ வரவில்லை அதுமட்டுமின்றி பந்தும் நன்றாக டிரையாக இருந்ததால் பவுலர்கள் பவுலிங் செய்ய கிரிப் கிடைத்தது. இதன் காரணமாக இன்றைய போட்டியில் எங்களது பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள் இன்றைய போட்டியில் இந்த வானிலை மாற்றமும் பெரிய அளவில் எங்களுக்கு கைகொடுத்து வித்தியாசத்தை காண்பித்தது என கோலி சுவாரசியமாக பேசியது குறிப்பிடத்தக்கது.