தன்னை மறந்து ஜடேஜாவை பாராட்டிய கோலி. அவரிடம் தோற்றதும் நல்லது தான் – கோலியோட சூப்பர் போகஸ்

Jadeja-1

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை நடைபெற்ற போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக நட்சத்திர வீரர் ஜடேஜா திகழ்ந்தார். பேட்டிங்கில் 28 பந்துகளை சந்தித்த அவர் 5 சிக்சர்கள் 4 பவுண்டரி என 62 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி பவுலிங்கில் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை அசத்தினார்.

Jadeja

அவரது பேட்டிங் பௌலிங் நேற்று இரண்டும் சிறப்பாக இருந்த வேலையில் எப்போதுமே பீல்டிங்கிற்கு பெயர்போன ஜடேஜா நேற்று பீல்டிங்கிலும் ஒரு கேட்ச் பிடித்தது மட்டுமின்றி அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ்டியனை தனது துல்லியமான த்ரோ மூலம் ரன் அவுட் செய்தார். இப்படி பெங்களூரு அணியின் ஒட்டுமொத்த தோல்விக்கும் நேற்று ஒரே ஆளாக திகழ்ந்த ஜடேஜாவிற்கு வாழ்த்துக்கள் ரசிகர்கள் மத்தியில் குவிந்து வருகிறது.

அதே வேளையில் நேற்றைய போட்டிக்கு பின்பு தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இருந்தும் ஜடேஜா வாழ்த்துக்களை பெற்றார். தோல்வி குறித்து பேசுகையில் கோலி பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டது மட்டுமின்றி ஜடேஜாவையும் மனதார பாராட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Jadeja

ஜடேஜாவின் எபிலிட்டியை இன்று நீங்கள் அனைவருமே பார்த்திருப்பீர்கள் ஜடேஜா இன்று பேட்டிங்கில் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அது மட்டுமின்றி அவருடைய ஒட்டுமொத்த இந்த சிறப்பான ஆட்டத்தையும் கண்டு நான் இன்று மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். ஏனெனில் இன்னும் இரண்டு மாதங்களில் அவர் இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறார்.

- Advertisement -

அப்போது இந்திய அணியின் பிரீமியர் ஆல்-ரவுண்டராக பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்த உள்ளார். அவர் இன்று விளையாடிய விதம் இந்திய அணிக்கு ஒரு வகையில் நல்லதுதான் இந்த சிறப்பான ஆட்டம் அவருக்கு கான்ஃபிடன்ஸ் கிடைப்பது மட்டுமின்றி இனி வரும் பல வாய்ப்புகளை அவர் இதே போன்று பிரகாசிக்க தூண்டுதலாகவும் இருக்கும் என கோலி டி20 உலகக் கோப்பையை மனதில் கொண்டு ஜடேஜாவை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.