என்ன சொல்றதுன்னே தெரியல. எங்க டீம்ல இருக்குற பெரிய மைனஸ்ஸே இதுதான் – தோல்விக்கு பிறகு ராகுல் வருத்தம்

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே குவித்தது.

rahul

- Advertisement -

வழக்கம்போலவே பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் இம்முறையும் ரன்களை குவிக்க திணறி வரிசையாக ஆட்டமிழந்து வெளியேறினார். அதிகபட்சமாக அகர்வால் 31 ரன்களும், ஜோர்டான் 30 ரன்களையும் குவித்தனர். கொல்கத்தா அணி சார்பாக பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் மற்றும் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள்.

அதன் பின்னர் 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 16.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் : ஒரு போட்டியில் அணி தோற்கும் போது அது நல்ல நினைவுகளை தராது.

இந்த தோல்வி குறித்து என்னால் என்ன கூறுவதென்று தெரியவில்லை. நாங்கள் இன்னும் நன்றாக விளையாட வேண்டியது அவசியம். எங்களைப் பொறுத்தவரை பேட்டிங்கில் இன்னும் நிறைய விஷயங்களை முன்னேற்ற வேண்டியிருக்கிறது. எங்களது வீரர்கள் இதனை புரிந்து கொண்டு விளையாட வேண்டும். இந்த போட்டியில் எளிதாக நாங்கள் விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்தது போட்டிக்கு தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.

Rahul

இந்த மைதானத்தில் ரிஸ்க் எடுத்து ஷாட்டுகளை விளையாட முடியவில்லை. நல்ல அணிகள் இந்த மைதானத்தில் விரைவாக அடாப்ட் செய்து கொள்ளும் இருப்பினும் நாங்கள் அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம் என்று ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement