கடைசி ஓவரில் நான் 36 ரன்கள் அடிப்பதற்கு முன்னர் தோனி என்னிடம் சொன்னது இதுதான் – ஜடேஜா ஓபன்டாக்

Jadeja
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 19-ஆவது லீக் போட்டியில் நேற்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி பெங்களூரு அணியின் சிறப்பான பந்து வீச்சின் காரணமாக 19-வது ஓவர் வரை சற்று குறைவான ஸ்கோரிலேயே இருந்தது. ஆனால் 20ஆவது அவரை எதிர்கொண்ட ஜடேஜா அந்த ஓவரில் 4 சிக்சர்கள் ஒரு பவுண்டரி என 37 ரன்கள் குவிக்க சென்னை அணி 192 ரன்கள் என்ற சற்று சவாலான இலக்கை பெங்களூர் அணிக்கு நிர்ணயித்தது.

- Advertisement -

அதன்பிறகு 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியால் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்காரணமாக 69 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி இந்த போட்டியில் தோல்வியை பெற்றது. சிஎஸ்கே அணி போட்டியில் பேட்டிங் செய்யும்போது 19-வது ஓவரில் முடிவு வரை கிட்டத்தட்ட போட்டி பெங்களூர் அணிக்கு சாதகமாக இருந்தது.

ஆனால் 20-வது ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேல் வீசிய அந்த ஓவரை அடித்து நொறுக்கிய ஜடேஜா அந்த ஓவரில் தான் சிஎஸ்கே நிலைமை முற்றிலுமாக மாற்றி வெற்றிப் பாதைக்கு திரும்பினார் என்று கூறலாம். அவர் அடித்த இந்த 37 ரன்கள் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது. இந்நிலையில்தான் 20வது ஓவரை எதிர் கொண்டு விளையாடும் முன்னர் தோனி தனக்கு கூறிய ஒரு விஷயத்தை ஜடேஜா போட்டிக்குப் பின்னர் பகிர்ந்துள்ளார்.

jadeja 1

பேட்டிங்கில் மட்டுமின்றி பவுலிங், பீல்டிங் என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் வெற்றிக்கு பிறகு பேசிய அவர் கூறுகையில் : இந்த போட்டியை நான் மிகவும் ரசித்து விளையாடினேன். வெற்றியில் எனது பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சி. என்னுடைய ஃபிட்னஸ், ஸ்கில்ஸ் என அனைத்தையும் வெளிப்படுத்தியதால் இன்று எனக்கு சக்சஸ் கிடைத்துள்ளது.

- Advertisement -

ஒரு ஆல்ரவுண்டராக நான் பேட்டிங் ஃபீல்டிங் பௌலிங் என அனைத்திலும் பயிற்சி எடுப்பது சற்று சிரமமான ஒன்று. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயிற்சியை மேற்கொண்டு வருவதால் எனது பணி சுமை குறைகிறது. இந்த போட்டியின் போது 20 ஆவது ஓவரில் நான் அடித்து ஆட வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என்னிடம் வந்த தோனி ஹர்ஷல் பட்டேல் கண்டிப்பாக இந்த கடைசி ஓவரை “அவுட் சைடு ஆஃப்பில்” (Out Side Off) தான் வீசுவார் என்று கூறினார்.

jadeja 1

அதனால் நான் அவர் கூறியபடி அந்த ஓவரை அடிக்க தயார் ஆகினேன். அதேபோன்று பந்துகள் வர அனைத்து பந்துகளுமே என் பேட்டில் சரியாக கனெக்ட் ஆனது. இதன் காரணமாக நாங்கள் 191 என்ற டீசண்டான ரன் குவிப்பை வழங்கினோம். இந்த ஒரு ஓவர் ஆட்டத்தை அப்படியே எங்கள் பக்கம் கொண்டு வந்தது. நான் களத்தில் இருக்கும் வரை என்னால் அடிக்க முடியும் என்று நம்பினேன் என்று கடைசி ஓவர் குறித்து ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement