6,6,6,6,6,4 – ஒரு ஓவரில் 37 ரன்கள் குவித்து RCBயை கதறவிட்ட ஜடேஜா வீடியோ இதோ

jade

மும்பை வான்கடே மைதானத்தில், 2021 ஐ.பி.எல் தொடரின் 19வது போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேற்று மோதியது. இதை டாஸ் வென்ற தல தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

jadeja 1

ருத்துராஜ் கெய்க்வாட்டு மற்றும் டூபிளசிஸு தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த கூட்டணியானது பவர்ப்ளே ஓவர்களில் 51 ரன்கள் குவித்தது. ருத்துராஜ் கெய்க்வாட் 33 ரன்களில் அவுட் ஆக, அவரை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா வந்தார்.

சுரேஷ் ரெய்னா 24 ரன்களில் அவுட் ஆக, அவரை தொடர்ந்து அடுத்த பந்திலேயே டூபிளசிஸும் 50 ரன்களில் அவுட் ஆனார். டூபிளசிஸுயின் விக்கட்டிற்கு பிறகு சென்னை அணி ரன்களை குவிக்க சற்று தடுமாறியது என்றே கூறலாம்.

Jadeja

19 ஓவர்கள் முடிந்த நிலையில் சி.எஸ்.கே அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த நிலையில் கடைசி ஓவரை ஹர்சல் பட்டேல் வீசினார். அச்சமயம் சென்னை அணியின் ஜடேஜா அந்த ஓவரை எதிர்கொள்ள நின்றார். அந்த ஓவரில் மட்டும் ஜடேஜா அடித்த ரங்களின் எண்ணிக்கை 37. இதில் 5 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி அடக்கம். இதன் மூலம் சி.ஸ்.கே அணி 191 ரன்கள் குவித்தது. ஜடேஜா அடித்த அந்த அதிரடி ரங்களின் வீடியோ பதிவு இதோ.

- Advertisement -