பிராவோ, அஷ்வினை தொடர்ந்து சி.எஸ்.கே அணிக்காக மகத்தான சாதனை படைத்த ஜடேஜா – ரசிகர்கள் வாழ்த்து

Jadeja

நேற்று நடைபெற்ற ஐபிஎல்லின் 19ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி பெங்களூர் அணிக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்சை ஆடிய பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

Harshal

இப்போட்டியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என தனது ஆல்ரவுண்டர் திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தினார் ஜடேஜா. பேட்டிங்கில் 28 பந்துகளை சந்தித்த அவர் 62 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடக்கம். இரண்டாவது இன்னிங்சில் பந்துவீசிய ஜடேஜா வாஷிங்டன் சுந்தர், ஏபி டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்து அசத்தினார்.

இதில் அவர் மேக்ஸ்வெல் விக்கெட்டை கைப்பற்றியபோது சென்னை அணிக்காக 100 விக்கெட்டுகள் எடுத்த மற்றொரு பவுலர் என்ற சாதனையைப் படைத்தார்.இதற்கு முன்னதாக சென்னை அணிக்காக டுவைன் பிராவோ மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் சென்னை அணிக்காக 100 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

jadeja 2

இந்த வரிசையில் இப்போது ஜடேஜாவும் இணைந்துள்ளார். சென்னை அணிக்காக விளையாடிவரும் ரவீந்திர ஜடேஜா இதுவரை அந்த அணிக்காக 135 போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவருடைய ஆவ்ரேஜ் 27.84 மற்றும் எகானமி 7.72 ஆகும். நேற்றைய போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Jadeja

ஜடேஜாவின் அதிரடி பேட்டிங்கிற்கு குவிந்து வரும் வாழ்த்துக்களுக்கு மத்தியில் ஜடேஜா சி.எஸ்.கே அணிக்காக தனது 100 விக்கெட்டை கைப்பற்றியதற்கும் ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.