ஒரே ஒரு ஆளை வச்சிட்டு ஒட்டுமொத்த பெங்களூரு அணியையும் சுருட்டி போட்ட தல தோனி – இதை நோட் பண்ணீங்களா ?

Jadeja
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 19ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவற்ற நிலையில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. பிறகு இரண்டாவது இன்னிங்சை ஆடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 122 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணியானது 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது.

tahir

இந்த போட்டியில் சென்னை அணிக்காக ஓப்ப்பனர்களாக களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட்டும், டுயூப்ளசியும் நல்ல வலுவான தொடக்கத்தை அமைத்து தந்தனர். ஆனால் 14வது ஓவர் வீசிய ஹர்ஷல் பட்டேல், அந்த ஓவரில் நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் சுரேஷ் ரெய்னா மற்றும் டுயூப்ளசிஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக எடுத்து போட்டியை பெங்களூர் அணியின் பக்கம் திசை திருப்பினார்.

- Advertisement -

டுயூப்ளசிஸ் அவுட்டானதும் களத்திற்கு வந்தார் ரவீந்திர ஜடேஜா. 19வது ஓவல் முடிவுற்றபோது சென்னை அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களாக இருந்தது. ஆனால் 20வது ஓவரில் மொத்த போட்டியையும் சென்னை அணியின் பக்கம் திசை திருப்பினார் ரவீந்திர ஜடேஜா. ஹர்ஷல் பட்டேல் வீசிய 20வது ஓவரில் ஐந்து சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து சென்னை அணியின் ஸ்கோரை 191 ரன்களுக்கு உயர்த்தினார். இந்த ஓவரில் மட்டும் சென்னைக்கு அணிக்கு 37 ரன்கள் கிடைத்தது.

jadeja 1

28 பந்துகளை சந்தித்த ஜடேஜா 62 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்மிழக்காமல் இருந்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடக்கம். பிறகு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பெங்களூர் அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. ஆனால் அங்கேயும் பெங்களூர் அணிக்கு தலைவலியாக வந்து நின்றார் ஜடேஜா. ஏழாவது ஓவரை வீசிய ரவீந்திர ஜடேஜா அந்த ஓவரில் வாஷிங்டன் சுந்தரை வெளியேற்றினார். அத்தோடு நிறுத்தாமல், இந்த தொடர் முழுவதும் பெங்களூர் அணியின் வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்த டிவில்லியர்ஸ் மற்றும் மேக்ஸ்வெல்லை தனது அடுத்தடுத்த ஓவரில் அவுட்டாக்கி பவுலிங்கிலும் போட்டியை சென்னை அணி பக்கம் திசை திருப்பினார்.

jadeja 2

இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் ஆடிய ஜடேஜா பவுலிங்கிலும் மிகச் சிறப்பாக பந்து வீசி 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அபாரமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என ஒரு ஆல்ரவுண்டராக கலக்கிய ஜடேஜா இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

Advertisement