டெல்லி அணியிலிருந்து வெளியேறிய அஷ்வினுக்கு பதிலாக விளையாடும் வீரர் யார் தெரியுமா ? – இவருக்கு வாய்ப்பா ?

Ashwin

ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி தற்போது பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது.

RCBvsDC

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி சார்பாக விளையாடிய தமிழக வீரரான அஸ்வின் தனது குடும்ப உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருங்கியவர்கள் உடன் இருந்து இந்த இக்கட்டான வேளையில் உதவ வேண்டும் என்ற காரணத்திற்காக ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.

அவரது இந்த அறிவிப்பு டெல்லி அணிக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அவரது இந்த முடிவினை ஏற்றுக்கொண்ட டெல்லி நிர்வாகமும் அவரின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் யார் விளையாடுவார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது.

Ishanth

அதன்படி இன்றைய பெங்களூர் அணிக்கு எதிரான டெல்லி அணியில் அஸ்வினுக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் சீனியர் வீரரான இசாந்த் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர்ந்து இருந்த இசாந்த் சர்மாவிற்கு அஸ்வின் விலகல் காரணமாக வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

ishanth 2

இந்திய அணியின் சீனியர் வீரரான இஷாந்த் ஷர்மா டி20 போட்டிகளில் பெரிதளவு விளையாடாததன் காரணமாக அவர் துவக்கத்தில் அணியில் சேர்த்துக் கொள்ளப்படாமல் இருந்தார். அதன் பின்னர் தற்போது அஸ்வின் விலகல் காரணமாக இஷாந்த் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது