பஞ்சாப் அணிக்கெதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு இவர்களே காரணம் – பாராட்டிய மோர்கன்

Morgan-1
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது கட்ட போட்டிகள் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று துவங்கியது. நேற்று துவங்கிய 21 ஆவது லீக் போட்டி கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையேயான நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் முடிவில் 123 ரன்களை மட்டுமே குவிக்க அதனை துரத்திய கொல்கத்தா அணி அபாரமாக விளையாடி பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் தங்களது தோல்வி பாதைக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேட்டியளித்த கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில் :

வெற்றிகள் கிடைப்பது இந்த தொடரில் ஈசியாக இல்லை. கடினமான உழைப்புக்கு பிறகு ஒரு வெற்றி கிடைக்கிறது. அந்த வகையில் இன்று நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம். குறிப்பாக பந்துவீச்சில் எங்களது ஆட்டம் இன்று சிறப்பாக இருந்தது. இந்த தொடரில் இரண்டாவது போட்டியில் விளையாடும் சிவம் மாவி கெயிலின் விக்கெட்டை வீழ்த்தியது எங்களுக்கு மிக சாதகமான விடயமாக மாறியது.

varun

கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசியது போலவே அவர் இந்தப் போட்டியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். எங்கள் அணியில் உள்ள ஸ்பின்னர்கள் இன்று சிறப்பாக பந்து வீசியதால் பஞ்சாப் அணியை பெரிய ரன் குவிப்புக்கு செல்லாமல் கட்டுப்படுத்தினோம். இறுதியாக தற்போது நாங்கள் ஒரு வெற்றியை பெற்றுள்ளதால் அதை அப்படியே கொண்டு செல்ல விரும்புகிறோம் என மோர்கன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

prasidh krishna

மோர்கன் கூறியது போலவே நேற்று கொல்கத்தா அணியின் பவுலர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். குறிப்பாக பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் மற்றும் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தனர்.

Advertisement