ஸ்டம்ப் மைக்கில் பதிவான தோனியின் பிளான். சொன்னது சொன்னபடி தட்டி தூக்கிய ஜடேஜா – வெளிவந்த சுவாரசியம்

Jadeja

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் குவித்தது. இதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் ரவீந்திர ஜடேஜா, கடைசி ஓவரில் 37 ரன்கள் குவிக்க சென்னை அணியால் 154 லிருந்து 191 ரன்கள் குவிக்க முடிந்தது. அன்றைய போட்டியில ரவீந்திர ஜடேஜா 28 பந்துகளில் 62 ரன்கள் குவித்த வைத்திருந்தார். அதில் ஐந்து சிக்சர்களும் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும்.

பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங் பீல்டிங் என அடுத்தடுத்து அன்றைய போட்டியில் ரவீந்திர ஜடேஜா அசத்தினார். குறிப்பாக பவுலிங்கில் 3 விக்கெட்டை வீழ்த்தினார். மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்த மகேந்திர சிங் தோனி. அந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முக்கிய இரு வீரர்களான கிளன் மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் இருவரையும் அவுட் ஆக்கினார். இவர்கள் இருவரும் அன்றைய போட்டியில் நின்று இருந்தால் நிச்சயம் பெங்களூரு அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.

ஆனால் அவர்களுக்கு எதிராக திட்டம் தீட்டி கொடுத்தார் மகேந்திர சிங் தோனி. அதன்படி பவுலிங் செய்த ஜடேஜா அன்றைய போட்டியில் இவர்கள் இருவரது விக்கெட்டையும் ஒரே ஓவரில் வீழ்த்தி காட்டினார். மேக்ஸ்வெல் நன்றாக ஆடிக் கொண்டிருந்த வேளையில், மிடில் ஸ்டெம்பில் போட்டாலும் ஆப் சைடில் தான் ஆடுகிறார். அதனால் பந்தை லெக் ஸ்டெம்ப் பக்கமாக வீசு ஜடேஜா என்று மகேந்திர சிங் தோனி ஸ்டெம்ப் பின்பக்கமிருந்து கூறினார். அவர் கூறியவாறே பந்துவீசி மேக்ஸ்வெல் விக்கெட்டை ரவிந்திர ஜடேஜா கைப்பற்றினார்.

அதேபோல அதற்கு அடுத்தபடியாக டிவில்லியர்ஸ் வந்தவுடன், டிவில்லியர்ஸ்ஸுக்கு பந்தை ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் போட வேண்டாம் என்று கூறினார். பந்து நன்றாக சுழன்று வருகிறது லெக் சைடு பக்கம் பந்தை சுழற்றி போடு என்றார், அவர் கூறியவாறு பந்தை லெக் சைட் பக்கமாக ஜடேஜா போட்டு அடுத்த நொடியில் டிவிலியர்ஸ் க்ளீன் போல்ட் ஆனார்.

- Advertisement -

jadeja

இவ்வாறு இவர்கள் இருவரது விக்கெட்டையும் மகேந்திர சிங் தோனி திட்டம் தீட்டி எடுத்த விதம் அனைத்தும் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. அதை மொழியாக்கம் செய்து அனைத்து ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அதன் வீடியோ இதோ
: