வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல் தொடரே வேண்டாம் என்று வெளியேற இந்த பயம் தான் காரணம் – டேவிட் ஹஸ்ஸி ஓபன்டாக்

14வது ஐபிஎல் லீக் தொடர் மிகவும் பாதுகாப்பான முறையில் வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கிறது. இதுவரையில் இருபத்தி ஒரு போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 21 போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் சென்னை அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டெல்லி அணி 8 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பெங்களூர் அணி 8 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், மும்பை அணி 6 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன. முதல் சுற்றாக சென்னை மற்றும் மும்பை மைதானங்களில் நடந்து முடிந்துள்ள போட்டிகள் தற்போது அதற்கு அடுத்த சுற்றான அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

dc

போட்டிகள் ஒரு பக்கம் பாதுகாப்பான முறையில் நடைபெற, வெளியே மக்கள் கொரோனா அச்சம் காரணமாக பீதியில் உள்ளனர். இந்த அச்சம் மக்களை மட்டுமல்லாமல் உள்ளே இருக்கும் ஒரு சில வீரர்களையும் பயமுறுத்தி உள்ளது. இந்நிலையில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருக்கும் இரு ஆஸ்திரேலிய வீரர்கள் ( கேன் ரிச்சர்ட்சன் மற்றும் ஆடம் ஜாம்பா ) கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர். இந்த அணியில் முன்னரே ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் பிலிப் வெளியேறியதன் காரணமாக நியூசிலாந்து வீரர் பின் ஆலன் மாற்று வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் மேலும் இரு வீரர்கள் வெளியேறியது அந்த அணியின் ரசிகர்களை சிறிது வருத்தம் அடையச் செய்துள்ளது.இருப்பினும் இவர்களது வெளியேற்றம் அந்த அணிக்கு எந்த வகையிலும் பாதிக்காது அவர்களுக்கு தகுந்த மாற்று வீரர்களை அந்த அணியில் ஏற்கனவே உள்ளனர் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

zampa

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக தனது பணியை செய்து கொண்டிருக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் ஹஸ்ஸி, இது சம்பந்தமான விளக்கத்தை நேற்று தெரிவித்துள்ளார். வீரர்கள் அவர்களது ஊருக்கு செல்ல விருப்பம் காட்டுவது பயம் காரணமாகவே. உள்ளே இருக்கும் வீரர்கள் செய்திகளை பார்க்கின்றனர், அதில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அதிகமாக கொண்டே இருக்கும் செய்தியை பார்க்கையில் அவர்களுடைய பயம் இன்னும் அதிகமாகிறது.

- Advertisement -

phillipe

அதன் காரணமாக அவர்கள் அச்சப்பட்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி அவர்களது சொந்த நாட்டுக்கு செல்ல போகின்றனர் . இருப்பினும் மற்ற ஒரு சில வீரர்கள் பாதுகாப்பாக ஐபிஎல் தொடர் முடியும் வரை விளையாடுவதாக உறுதி கூறி வருகின்றனர். இது மாதிரியான நேரங்களில் மக்களுக்கு மனரீதியாக சந்தோஷம் மிக மிகத் தேவை. நாங்கள் விளையாடுவதன் மூலம் அவர்கள் சந்தோஷப்பட்டால், அதுவே எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்று நம்பிக்கையுடன் டேவிட் ஹசி கூறி முடித்தார்.