ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறப்போகிறார்களா 30 பேர்? பிசிசிஐ கூறுவது என்ன?

ipl

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரனோ எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்தியாவில் ஒரு நாளுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு போட்டுள்ளது. நிலைமை மோசமாக கொண்டே இருக்கும் வேளையில் முழுநேர ஊரடங்கும் போடுவதற்கான ஆலோசனைகளை மத்திய அரசிடம் பேசி வருகிறது.

Corona-1

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மிகவும் பாதுகாப்பாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வந்து கொண்டு இருக்கிறது. இருப்பினும் ஒரு சில ஆஸ்திரேலிய வீரர்கள் கொரோனா அச்சம் காரணமாக நாடு திரும்புவதாக கூறியுள்ளனர். ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் மற்றும் அன்ட்ரூ டை ஆகியோர் ஐபிஎல் தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறி உள்ளனர். அதேபோல் தற்போது ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் உட்பட 50க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள், சப்போர்ட் ஸ்டாஃப் என அனைவரும் ஆஸ்திரேலியா திரும்ப உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கும் கொரோனா காரணமாக ஆஸ்திரேலிய அரசாங்கம் மே 15 ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா வரும் விமானங்களை நிறுத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த செய்தி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட கொண்டிருக்கும் அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களையும் அச்சரித்துயுள்ளது. ஐபிஎல் தொடர் மே 30ஆம் தேதி தான் நிறைவு பெறும்.

Warner

எனவே ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் எப்படி தங்களுடைய நாட்டுக்கு செல்வது என அனைவரும் யோசித்து வருகின்றனர். ஒருவேளை விமானங்கள் நிறுத்தப்பட்டு விட்டால் இங்கேயே மாட்டிக் கொள்ள நேர்ந்து விடுமோ என்று அனைவரும் யோசித்து வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. நடப்பதை எல்லாம் வைத்துப் பார்க்கையில் 30க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியா வீரர்கள் அனைவரும் தங்களுடைய நாட்டுக்கு செல்ல போகிறார்கள் என்றும் ஒரு சில செய்தியாளர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Smith

ஆனால் பிசிசிஐ தொடர் முடிந்தவுடன் அனைத்து வீரர்களையும் அவர்களது நாட்டுக்கு பத்திரமாக நாங்கள் அனுப்பி வைப்போம் என்று உறுதி அளித்துள்ளது. இதை ஏற்றுக்கொண்டு அனைத்து வீரர்களும் தொடர் முடியும் வரை இருந்து விளையாடுவார்கள் என்று பொருத்திருந்து தான் பார்க்க முடியும். ஒருவேளை அனைத்து ஆஸ்திரேலியா வீரர்களும் சென்றுவிட்டால் ஐபிஎல் போட்டிகளில் சுவாரசியம் குறைந்துவிடும் என்பதே உண்மை.