நேற்றிரவு நடந்த போட்டியில் விளையாடிய அஷ்வின் இன்று ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி

Ashwin

தமிழக வீரரும், டெல்லி அணியின் நட்சத்திர வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்று இரவு நடைபெற்ற சன்ரைஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி தனது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 27 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை என்றாலும் தேவையான நேரத்தில் சன் ரேசர்ஸ் அணியை அழுத்தத்தில் கொண்டு வந்து தனது அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.

ashwin 1

இந்த தொடர் முழுவதுமே டெல்லி அணிக்காக சிறப்பாக பந்து வீசி வரும் அஸ்வின் டெல்லி அணியில் ஒரு முக்கிய பந்துவீச்சாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது நேற்று இரவு போட்டியில் பங்கேற்ற அவர் இன்று காலை திடீரென தான் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் சற்று கவலையில் இருந்தாலும் ஏன் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன் என்பது குறித்து தெளிவான விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அதன்படி தற்போது ஐபிஎல் போட்டிகள் சென்னை மற்றும் மும்பை ஆகிய மைதானங்களில் முடிவடைந்த நிலையில் இந்த தொடரானது அடுத்த கட்டத்தை நோக்கி நகர உள்ளது. இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அஸ்வின் தனது விலகல் குறித்து பதிவிட்டுள் அஸ்வின் : தனது குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்த இக்கட்டான நிலையில் அவர்களுக்கு தான் உதவி விரும்புவதாகவும் அதன் காரணமாக தான் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தனது பதிவினை வெளியிட்டு உள்ளார்.

மேலும் நிலைமை சரியாகும் பட்சத்தில் தான் மீண்டும் அணிக்கு விளையாட வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அஸ்வினின் இந்த முடிவிற்கு டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகமும் சம்மதம் தெரிவித்துள்ளதால் அவர் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேற்று இரவு சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் பெற்ற வெற்றியின் மூலம் தங்களது 4-வது வெற்றியை பதிவுசெய்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய நிலையில் அஸ்வின் விலகல் டெல்லி அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ashwin

இருப்பினும் அஸ்வின் விலகலுக்கான காரணம் நியாயமாக இருப்பதால் அவரது இந்த வேண்டுகோளை டெல்லி நிர்வாகம் ஏற்றுள்ளது. இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகத்தீவிரமாக பரவி வருவதால் இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் அனைவருடனும் இருந்து இந்தக் கொரோனாவுக்கு எதிராக போராட இருப்பதால் அஸ்வின் எடுத்த இந்த முடிவிற்கு வரவேற்பும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement