கொரோனா பரவல் எதிரொலி : பி.சி.சி.ஐ க்கு எதிராக கேள்வி கேட்ட ராஜஸ்தான் அணி வீரர் – விவரம் இதோ

Tye

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் பல்வேறு கொரோனா விதிமுறைகளின்படி கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாக பரவி வருவதை பார்த்து ஐபிஎல்லில் விளையாடும் பல வெளிநாட்டு வீரர்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது வரை பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர்களான ஆடம் ஜாம்பா மற்றும் கேன் ரிச்சார்ட்சன் ஆகியோர் விலகினார்கள்.

zampa

அதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்த இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரு டை உள்ளிட்டோர் கொரானா பரவலின் அச்சத்தால் இந்த தொடரிலிருந்து விலகி விட்டனர். இந்த நிலையில் தொடரில் இருந்து விலகி விட்ட ஆண்ட்ரு டை அளித்த பேட்டியில்,

பயோ பபுள் விதிமுறையானது வீரர்களுக்கு பாதுகாப்பான ஒன்றுதான், ஆனால் அந்த பாதுகாப்பு எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பதே மிகப்பெரிய கேள்வியாகும். தற்போது இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலைகளை நான் கண்டபோது மருத்துவமனையில் மக்களை அனுமதிக்கவே இயலாத சூழ்நிலையில்தான் நாடு இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு மட்டும் ஐபிஎல்நிர்வாகமும் இந்திய அரசும் எப்படி செலவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

dc

கொரனா பரவலினால் மன அழுத்தத்தில் இருக்கும் மக்களுக்கு கிரிக்கெட் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு பொழுதுபோக்கு என்ற பார்வையில் இது சரியான முடிவுதான் என்று கருதுகிறேன் என்று கூறினார்.

- Advertisement -

ashwin 1

இப்படி ஆஸ்திரேலிய வீரர்கள் கொரானாவை காரணம் காட்டி தொடரில் இருந்து விலகி வரும் சூழ்நிலையில், இன்னொரு ஆஸ்திரேலிய வீரரான பேட் கம்மின்ஸ் தனது ஐபிஎல் சம்பளத்தில் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை இந்திய அரசாங்கத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க நன்கொடையாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.