சொதப்பல் மன்னன் கேதார் ஜாதவ்வை அவுட் ஆகிய மாபெரும் சாதனையை தக்கவைத்து கொண்ட மிஸ்ரா – விவரம் இதோ

Mishra

நேற்றைய ஐபிஎல் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 159 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக துவக்க வீரர் ப்ரித்வி ஷா 53 ரன்கள் குவித்தார். அவரது வந்து ஸ்டீவ் ஸ்மித் 34, பண்ட் 37 மற்றும் ஷிகர் தவான் 28 ரன்கள் குவித்தனர். பின்னர் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியில் கேன் வில்லியம்சன் பேர்ஸ்டோ மட்டும் நன்றாக விளையாட மற்ற அனைத்து வீரர்களும் சொதப்பினார்கள்.

Shaw-1

பேர்ஸ்ட்ரோ 38 ரன்களும் கேன் வில்லியம்சன் 66 ரன்கள் அடிக்க இறுதியில் வந்த சுஜித் ஒரு சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் அடித்து கொடுக்க ஆட்டம் டிரா ஆனது. இதன் பின்னர் நடைபெற்ற சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது. சூப்பர் ஓவரில் கேன் வில்லியம்சன் மற்றும் டேவிட் வார்னர் விளையாடினார். சூப்பர் ஓவரில் 8 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் மற்றும் தவான் சூப்பர் ஓவர் விளையாட வந்தனர். இருவரும் கடைசி பந்தில் 8 ரன்கள் அடிக்க டெல்லி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியில் ஹைதராபாத் அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது, பின்னர் வில்லியம்சன் உடன் சேர்ந்து விளையாட கேதர் ஜாதவ் களமிறங்கினார். சென்னை அணிக்காக பல போட்டிகளில் நெருக்கடியான நேரத்தில் களமிறங்கி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் உடையவர் கேதர் ஜாதவ்.

முதல் பந்தில் இருந்து தடுமாற தொடங்கிய கேதர் ஜாதவ், 8 பந்துகளுக்கு 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அமித் மிஷ்ரா தனது பந்தில் அவர் அடித்து ஆட விரும்புகிறார் என கணித்து கொண்டார். சரியாக பந்தைச் சுழற்றி அமித் மிஸ்ரா வீச, எதிர்பார்த்தபடியே கேதார் ஜாதவ் இறங்கி ஆட முயற்சித்தார். ஆனால் பந்து நேராக ரிஷப் பண்ட் கைக்கு சென்று அது ஸ்டும்பிங் ஆக மாறியது. அற்புதமாக திட்டம் தீட்டி கேதர் ஜாதவ் விக்கெட்டை அமித் மிஸ்ரா கைப்பற்றினார்.

- Advertisement -

mishra

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் ஸ்டெம்பிங் மூலம் கைப்பற்றப்பட்ட பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தான் என்ற சாதனையை அவர் மேலும் பலப்படுத்தி உள்ளார். இதுவரை 27 முறை ஸ்டம்பிங் மூலம் விக்கெட்டுகளை கைப்பற்றி அமித் மிஷ்ரா நேற்றைய போட்டியில் தனது 28வது ஸ்டம்பிங் விக்கெட்டை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் ஸ்டெம்பிங் மூலம் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள்

அமித் மிஸ்ரா (28)

ஹர்பஜன் சிங் (18)