வார்னர், ரோஹித், ரெய்னாவை பின்னுக்கு தள்ளிய மிஸ்டர் 360. ஐ.பி.எல் வரலாற்றில் சிறப்பான சம்பவம் – விவரம் இதோ

ABD

நடப்பு ஐபிஎல் தொடரானது பல்வேறு கொரானா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 22வது லீக் போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு செல்லும் என்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக மிகவும் போராடின.

Kohli-1

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பவர்ப்பிளே ஓவர்களிலேயே பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இளம் வீரரான படிக்கல் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் அந்த அணியின் ஆபத்பாந்தவனாக எப்போதும் திகழும் ஏபி டி வில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

பின்பு இரண்டாவது இன்னிங்சை ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பவர் பிளே ஓவர்களிலேயே ஷிகர் தவான் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. பின்பு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பன்ட்டுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார் ஷிம்ரன் ஹெட்மையர். கடைசி பந்தில் 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ரிஷப் பன்ட்டால் பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்திய பெங்களூர் அணி புள்ளிப் பட்டியிலில் முதல் இடத்திற்கு சென்றது.

abd 2

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆடிய பெங்களூர் அணியின் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். விக்கெட்டுகளை இழுந்து தடுமாறிக் கொண்டிருந்த பெங்களூர் அணியை தனது அதிரடியின் மூலம் ஒரு நல்ல வலுவான ஸ்கோரை எட்ட உதவிய டிவில்லியர்ஸ், ஐபிஎல் தொடர்களில் குறைந்த பந்துகளில் 5000 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அக்‌ஷர் பட்டேல் வீசிய 15வது ஓவரின் மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு விளாசியபோது இந்தச் சாதனையை அவர் படைத்தார்.

- Advertisement -

abd 1

இந்த பந்து அவர் ஐபிஎல்லில் எதிர்கொண்ட 3288வது பந்தாகும். தொடர்ந்து விளையாடிய டி வில்லியர்ஸ் 42 பந்துகளில் 75 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டிவில்லியர்ஸ்க்கு அடுத்தபடியாக குறைந்த பந்துகளில் 5000 ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் டேவிட் வார்னர் (3554 பந்துகள்), ரெய்னா ( 3620 பந்துகள்). ரோஹித் சர்மா (3817 பந்துகள்) ஆகியோர் உள்ளனர்.